Tuesday, April 18, 2023

மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

2023 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (SSC CGL) அறிவிப்பை (Combined Graduate Level Examination, 2023) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆள் சேர்க்கையின் மூலம், உத்தேசமாக சுமார் 7,500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இவற்றில் மத்திய அரசின் தலைமை செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றில் உதவிப் பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்களும், மத்திய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றில் ஆய்வாளர் பணியிடங்களும் (Inspector) மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் உதவியாளர், கண்காணிப்பாளர்களும் (Assistant Superintendent) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த தேர்வுக்கான பாடப் பிரிவுகள் பெரும்பாலும் டிஎன்பிஎஸ்சி, வங்கி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அறிந்த ஒன்றாக இருப்பதால், மேற்படி தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

இத்தேர்விற்கான கல்வித் தகுதி குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: கணினி வழியில் நடைபெறும் நிலை I தேர்வு, நிலை- II தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் Merit List தயாரிக்கப்படும். நிலை 1-ல் பொதுவான போட்டித் தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension பிரிவுகளிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படுகிறது. நிலை 2-ல் Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge மற்றும் General studies பாடப் பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகிறது.

தேர்வுக் கட்டணமாக ரூபாய் 100/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக 03-05-2023; நள்ளிரவு 11 மணி வரைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் B மற்றும் குரூப் C அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

Featured News

தமிழ்க்கடல்

Labels

1-5 10 வகுப்பு 10TH ENGLISH 10TH MATHS 10TH SCIENCE 10TH SOCIAL SCIENCE 10TH TAMIL 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் 8TH ENGLISH 8TH MATHS 8TH SCIENCE 8TH SOCIAL SCIENCE 8TH TAMIL 9 வகுப்பு AADHAAR ADMISSION Android Apps Annual Planner ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BEO BOOKS BULLETIN CBSE BOOKS CBSE EXAMS CBSE NEWS CCE CEO செயல்முறைகள் Certificate CM CELL CM LETTER COLLEGE LINKS COMPLETE MATERIALS COMPUTER Contact Numbers COURT ORDER CPS CRC CSAT CSIR CTET Current Affairs D A DEO செயல்முறைகள் DEPARTMENTAL EXAM DUPLICATE E - LEARN ELECTION NEWS EMIS Ennum Ezhuthum EQUIVALENCE EXAMS FEES PAYMENT FONTS Forms G K G.Os GATE GAZETTE GENUINENESS go GPF HALL TICKET Hand Book HI TECH LAB HISTORY GK HOLIDAY ICT IFHRMS IMPORTANT LINKS INCENTIVE INCOME TAX INCREMENT INSPIRE AWARD ITK JEE Kalvi Tv Videos LAB ASSISTANT LESSON PLAN MAGAZINE NAS NEET NET NEWS NHIS NMMS ONLINE CLASS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS PAY ORDER PERMISSION PINDICS POLICE POSTAL PSTM PTA QR CODE VIDEOS R H LIST RAILWAY REGULARISATION ORDER RESULT RMSA RRB RTE RTI LETTERS SAFETY AND SECURITY SCHOLARSHIP SCHOOL CALENDAR School Children Movie SCHOOL DIARY SET SHAALA SIDDHI SLAS SMC SOFTWARE SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TIME TABLE TNEB TNPSC TNSED Tr TRAINING TRANSFER TRB TRB-TET-NET UDISE UPSC VACANCY LIST Vanavil Mandram VAO VIDEO VIDEO STORIES WORK SHEET YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரசிதழ் வெளியீடு அரியது அறிவியியல் ஆணையர் செயல்முறைகள் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் உதவித்தொகை உள்ளூர் விடுமுறை ஊதிய உயர்வு எழுத்தறிவுத் திட்டம் ஓய்வூதியம் கட்டுரை கதைகள் கலந்தாய்வு கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை கற்றல் விளைவுகள் கனவு ஆசிரியர் காலை உணவு திட்டம் காலை வழிபாடு சட்டம் சிறப்புச் செய்திகள் சிற்றிதழ் தமிழக பட்ஜெட் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் நூல்கள் திருக்குறள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொலைபேசி எண்கள் தொழில்நுட்பச் செய்திகள் நம்பிக்கை நான் முதல்வன் நீதிக் கதைகள் நீதிமன்றம் உத்தரவு பணிவரன் முறை பணிவரன் முறை ஆணை பதவி உயர்வு பலகாரம் பள்ளி பார்வை புவிசார் குறியீடு பொதுச் செய்திகள் மத விடுப்பு மருத்துவம் மன்றங்கள் மொழித் தேர்வு யோகா யோகாசனம் ராசி பலன்கள் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாழ்த்துத் செய்தி வானவில் மன்றம் வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜாக்டோ ஜியோ ஜோதிடம்