Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 16, 2023

நரம்பு மண்டலத்தை வலுவாக்கும் 'விட்டமின் B12' நிறைந்த சில உணவுகள்!

வைட்டமின் பி 12 சத்தின் முக்கியத்துவம் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. உடலில் வளர்சிதை மாற்றத்திலிருந்து DNA சின்தஸிஸ் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் வரை பல முக்கிய செயல்பாடுகளுக்கு விட்டமின் B12 தேவைப்படுகிறது.

வைட்டமின் B12 குறைபாடு இருந்தால், அது பல உடல் நல சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் B12 மிகவும் முக்கியம். விட்டமின் பி12 குறைபாடு இதய நோய் ஆபத்துக்களையும் அதிகரிக்கும்.

நம் உடல், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், வைட்டமின் பி 12 அடிப்படையிலான உணவுகளை சாப்பிட வேண்டும். இவை இரத்த அணுக்கள் உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த முக்கியமான சத்து உடலில் குறைபாடு ஏற்பட்டால், எலும்புகள் வலுவிழந்து, மூட்டு வலி பிரச்சனையையும் சந்திக்க வேண்டியிருக்கும். அத்தகைய உணவை உட்கொள்ளாதவர்களுக்கு இரத்த சோகை ஏற்படும் அபாயம் அதிகம். இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ், வைட்டமின் பி12 அபரிமிதமாக உள்ள 5 உணவுகள் எவை என்று கூறினார்.

கீழ்கண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் பி12 குறைபாட்டினை தவிர்க்கலாம்

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி பச்சை காய்கறிகளில் மிகவும் ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. இதில் வைட்டமின் பி12 தவிர, வைட்டமின் பி-9, அதாவது ஃபோலேட் இதில் ஏராளமாக உள்ளது. இதனை சாலட் வடிவில் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.

முட்டை

முட்டை ஒரு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. முட்டை பொதுவாக புரதத்தின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது, ஆனால் இது வைட்டமின் பி-12 இன் தினசரி தேவையில் 46 சதவீதத்தை வழங்குகிறது. தினமும் 2 முட்டைகள் சாப்பிட பி12 குறைபாடு ஏற்படாது.

சோயாபீன்

சோயாபீன் சைவ உணவு உண்பவர்களுக்கான சிறந்த புரத உணவாகக் கருதப்படுகிறது. ஆனால் இது உடலுக்கு வைட்டமின் பி-12 ஐ ஏராளமாக வழங்குகிறது. நீங்கள் சோயா பால், டோஃபு அல்லது சோயா துண்டுகளை சாப்பிடலாம்.

மீன்

அசைவ உணவுகளை விரும்புவோருக்கு, மீன் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இது வைட்டமின் பி 12 இன் தேவைகளை சிறந்த முறையில் பூர்த்தி செய்கிறது. குறைந்த எண்ணெயில் சமைக்க முயற்சிக்கவும்.

No comments:

Post a Comment