
நெருக்கடிகள் அதிகரித்திருக்கும் இன்றைய நகர வாழ்க்கையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவோர் அதிகம்.
பணிச் சூழல் ஒரு காரணமாக இருந்தாலும், நாம் உண்ணும் உணவு நம்முடைய மன நலனை கெடுப்பதிலும் கூட்டுவதிலும் முக்கியமானதாக உள்ளது. ஆகவே மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமானால், ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டும்.கீரைகள் மன அழுத்தம் போக்கும் உணவுகளில் முதலில் நிற்கக்கூடியதும் முதன்மையானதும் கீரைதான். பெரும்பாலான கீரைகளில் மக்னீசியம், பொட்டாசியம், கெரோட்டின் போன்ற மனதுக்கு அமைதியும் உற்சாகமும் அளிக்கக்கூடிய உட்பொருட்கள் உள்ளன. கீரை ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் காணப்படும் பொருள்.
ஆனாடி ஆக்ஸிடென்ட் உடலில் புதிய செல்கள் உருவாக்குவதற்கு துணைப்புரிகிறது.காய்கறிகள் பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்பவர்களுக்கு மன அழுத்தம் என்பதே இருக்காது. அதனால் காய்கறிகளை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும் இதை சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும்.சிறுதானியங்கள் சிறுதானிய உணவுகளான வரகு, திணை, சாமை, கம்பு, குதிரைவாலி போன்றவற்றை வாரத்தில் இரண்டு மூன்று நாட்களேனும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் ஒப்பீட்டளவில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து போன்றவை அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் காணப்படும். இந்த உணவுகள் எளிதில் செரிமானமும் ஆகிவிடும்.
எனவே இவை உடலுக்கு ஊட்டச்சத்தையும் மனதுக்கு நலத்தையும் கொடுக்கும்.மீன், முட்டை மீன், முட்டை போன்றவைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கியிருக்கின்றன. இவை மன அமைதியை கொடுக்க கூடியவை.தயிர் தயிர் எலும்பு வளர்ச்சிக்கு மற்றும் துணைப்புரிவதோடு மன அழுத்தத்தை குறைக்கும் பணியையும் செய்கிறது. பெண்கள் மாதவிடாயின் போது தயிரை சாப்பிட்டு வந்தால் படபடப்பு குறைந்து மன அமைதி கிடைக்கும்.பழங்கள் இயற்கையில் கிடைக்கும் சத்தான பொருட்களில் பழங்கள் முக்கியமானது. பழங்களை வாங்கி உண்பதை தவிர்த்து, அதையும் பழச்சாறு பாட்டிலாகவே வாங்கி பருகுகிறோம்.
இயற்கை பழங்களில் கிடைக்கும் சத்தில் கால் பங்கு கூட, இவற்றின் மூலம் நம் உடலுக்கு போய் சேராது. அதனால் எப்பொதும் உங்கள் தேர்வாக இயற்கை பழங்களே இருக்கட்டும். சாறுள்ள பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, அண்ணாச்சி, மாதுளை போன்றவை ரத்த சுத்தகரிப்புக்கு உதவுபவை. இவை ரத்தத்தில் வெள்ளையணுக்கள் உற்பத்தியையும் கூட்டி நோய் தடுப்பாற்றலை உருவாக்கும். மேலும் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கும். சதைப்பற்றுள்ள பழங்களான கொய்யா, பப்பாளி, மாம்பழம், நெல்லிக்கனி, ஆப்பிள் போன்றவை எலும்புகளுக்கு சத்து சேர்த்து இளமையோடும் அழகோடும் இருப்பதற்கு உதவுகிறது.
No comments:
Post a Comment