பொதுவாக தேங்காய் எண்ணெய் அனைவரின் வீடுகளிலும் இருக்கும் .இந்த எண்ணெயை நாம் தலை முடிக்கு மட்டும்தான் உபயோக படுத்துகிறோம் ,ஆனால் கேரள மக்கள் இந்த எண்ணெய் கொண்டு சமையல் செய்து சாப்பிடுகின்றனர் ,ஆயுர்வேதத்தில் தேங்காய் எண்ணெய் மூலம் ஆயில் புல்லிங் செய்தால் நம் பற்கள் மற்றும் ஈறுகள் மற்றும் வாயில் உள்ள கிருமிகளை கொள்ளலாம் என்று கூறுகின்றனர் .மேலும் தேங்காய் எண்ணெய் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி நம் இதயத்தை பாதுகாக்கிறது .சிறுநீரக கற்கள் வராமல் பாதுகாக்க தேங்காய் எண்ணெயில் சமைத்து சாப்பிடலாம் ,காலையில் காலி வயிற்றில் இந்த எண்ணெயை குடித்தால் வாய் துர்நாற்றம் முதல் எடை வரை குறைக்கலாம் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்
1.சிலர் இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் அப்ளை செய்து தூங்குவர் ,இப்படி செய்வதால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதமும், வழவழப்புத் தன்மையும் கிடைக்கிறது.

2.இப்படி இந்த எண்ணெயை யூஸ் பண்ணினால் மென்மையான சருமத்தைப் பெறலாம்.
3.மேலும் இதை எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் முகத்தில் பூஞ்சைகள், அழுக்குகளை அழித்துபொலிவை முகத்துக்கு கொடுக்கும் .
4.பகலை விட இரவில் இந்த லாரிக் ஆசிடின் ஆற்றல் அதிகம் .அதனால் தேங்காய் எண்ணெய்யை இரவு அப்ளை செய்வது நல்லது.



No comments:
Post a Comment