Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 27, 2023

வறுத்த உப்புக்கடலையில் இத்தனை நன்மைகளா..?



இந்த சுவையான ஸ்னாக்ஸ் மூலம் எடை குறைப்பு செயல்முறையை வேகப்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா..? ஆம், இவை மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் உடல் எடையை குறைக்கும் செயல்முறைக்கு உதவக்கூடியவை. நிபுணர்கள் தினசரி டயட்டில் இவற்றை சேர்க்கலாம் என கூறுகின்றனர். மேலும் வறுத்த கொண்டைக்கடலையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது உடலுக்கு உடனடி ஆற்றலையும் வழங்குகிறது.

வறுத்த உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கே...

எலும்பு ஆரோக்கியம் :

வறுத்த உப்புக்கடலையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. நம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் தேவைப்படுகிறது, இது ஒரு முக்கிய மினரல் ஆகும். உங்களை டயட்டில் வறுத்த உப்புக்கடலையை சேர்த்து கொள்வது உடலின் எலும்புகளை வலிமையாக பராமரிக்க மற்றும் பல நோய்களை தடுக்கவும் உதவுகிறது.

புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது : 

ரோஸ்ட்டட் சன்னா என குறிப்பிடப்படும் வறுத்த உப்புக்கடலையில் கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்ஸ்கள் நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு புரதம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதுடன், இந்த வறுத்த கருப்பு சன்னாவில் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. மேலும் இதனை சாப்பிடும் போது நம் உடலுக்கு உடனடியாக எனர்ஜி கிடைக்கிறது.

மெமரியை ஷார்ப்பாக்குகிறது : 

வறுத்த உப்புக்கடலையில் சிறந்த ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருப்பதால் அவை மன மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. மூளையின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமான கோலினின் சிறந்த ஆதாரமாக வறுத்த சன்னா இருப்பதால் இந்த நன்மை கிடைக்கிறது. நரம்புகளின் செயல்பாட்டிற்கு முக்கியமான தாதுவான மெக்னீசியமும் கருப்பு கொண்டைக்கடலையில் ஏராளமாக உள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த ஸ்னாக் : 

லோ கிளைசெமிக் இண்டெக்ஸ் (GI) உணவுகள் அனைத்து நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றவை. மற்ற உணவுகளை சாப்பிடும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மாறுவதை போல, low GI கொண்ட உணவு பொருட்களை உண்பதால் மாறாது. அந்த வகையில் ரோஸ்ட்டட் சன்னாக்கள் குறைந்த GI அளவைக் கொண்டிருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த ஸ்னாக்காக இவை உள்ளன.

இதய ஆரோக்கியம் : 

ரோஸ்ட்டட் சன்னாவானது காப்பர், மாங்கனீஸ், ஃபோலேட் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்டவற்றின் சிறந்த மூலமாகும். இவை அனைத்துமே இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாஸ்பரஸ் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய செயல்பாட்டை பராமரிப்பதாக கூறப்படுகிறது.

எடை இழப்பு : 

நார்ச்சத்து அடங்கிய சிறந்த ஸ்னாக்ஸாக இருக்கும் வறுத்த உப்புக்கடலையில் உள்ள டயட்டரி ஃபைபர் சப்ளிமெண்ட்ஸ், உட்கொள்ளும் உணவின் அளவு மற்றும் ஃப்ரீக்வென்ஸியை குறைப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவுகிறது. ஏனென்றால் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருப்பதை போன்ற உணர்வு ஏற்படும். லேசாக உப்பு போட்டு வறுக்கப்பட்ட மொறுமொறுப்பான இந்த ஸ்னாக்ஸ் மிகுந்த ஆரோக்கியமானது என்பதால் குற்ற உணர்ச்சியின்றி சாப்பிடலாம்.

No comments:

Post a Comment