Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 16, 2023

கருவேலம் பட்டை மூலம் உருத்தெரியாமல் போகும் நோய்கள்


பொதுவாக சாலையோரம் விளைந்து கிடக்கும் பல செடிகளில் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை நம் முன்னோர்கள் கூறி விட்டு சென்றனர் .அதில் ஆடாதோடை மற்றும் பல்வகை கீரைகள் அடங்கும் .இந்த வரிசையில் கருவேலம்பட்டையும் சேரும் .அதில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.கருவேலம் பட்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

2.கருவேலம் பட்டையின் பிசின் காய்ச்சல், வாந்தி, இருதயநோய்,போன்ற நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது

3.மேலும் கருவேலம் பட்டை பிசின் நமச்சல், மூலம், நுரையீரல் நோய், கிட்னி சம்பந்தமான நோய்களை வரவிடாமல் அரண் போல காக்கும்

4.கருவேலம் பட்டை கொழுந்து தாதுக்களின் எரிச்சல் தணித்து அவற்றைத துவளச்செய்யும்,

5.கருவேலம் பட்டையின் கொழுந்து சளியை அகற்றும்.ஆற்றல் கொண்டது

6.கருவேலம் பட்டையின் இலையை அரைத்துப் புண்கள் மீது வைத்துக் கட்டினால் புண்கள் விரைவில் ஆறும் .

7.கருவேலம் பட்டையின் இலையை அரைத்து இரவில் ஆசனவாயில் வைத்துக் கட்டி வந்தால் மூலம் மாயமாய் மறைந்து விடும் .

8கருவேலம் பட்டை குடிநீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல்லாட்டம் ஆகியவை இருக்குமிடம் தெரியாமல் போகும்

9.கருவேலம்பட்டையையும் வதுமைக் கொட்டைத் தோலும் சம அளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வாருங்கள்

10.இதனால் பல்லீறுகளில் உள்ள புண், கூச்சல், பல்வலி, பல் பல்லாட்டம் ஆகியவை தீரும்.

No comments:

Post a Comment