Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 6, 2023

தொலைந்து போன ரேஷன் அட்டைக்கு பதிலாக நகல் மின்னணு குடும்ப அட்டை பெறும் வசதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்


தொலைந்து போன குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, நகல் மின்னணு குடும்ப அட்டையை இணையதளம் மூலம் பெறும் நடைமுறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பொது விநியோக திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நியாயவிலை கடை பணியாளர்களின் பணியினை பாராட்டி ரொக்க பரிசு மற்றும் நற்சான்றிதழ்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடும்ப அட்டைதாரர்கள் நகல் குடும்ப அட்டை பெற மண்டலம் அல்லது வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே பணம் செலுத்திடவும் அஞ்சல் வழியிலேயே தங்கள் முகவரியிலேயே பெற்றிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குடும்ப அட்டைதாரர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும்போதே, அட்டைக்கான கட்டணம் ரூ.20 மற்றும் அஞ்சல் சேவை கட்டணம் ரூ.25 ஆக மொத்தம் ரூ.45 இணையவழியில் QR code அல்லது Net banking வழியாக செலுத்தி அச்சிடப்பட்ட நகல் குடும்ப அட்டையினை அஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய வசதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

No comments:

Post a Comment