Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 27, 2023

தேனுடன் பட்டை சேர்த்து குடித்தால் எந்த நோயை கட்டையால் அடிச்சி துரத்தலாம் தெரியுமா ?



பொதுவாக தேனில் உள்ள மருத்துவ குணத்தால் அது ஆயுர்வேதத்தில் நமக்கு பல நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது .தேனை தனியாகவோ அல்லது வேறு ஒரு பொருளுடனோ சேர்த்து சாப்பிடும்போது சில நோய்கள் வராமல் தடுக்கலாம் .தேனை லெமனுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது இஞ்சியுடன் சேர்த்து சாப்பிடலாம் .இப்படி பல மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் தேனின் மற்றொரு சிகிச்சை முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.தேனில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன .இவை நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றன

2.தேனில் நிறைய ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன ,இவை தொற்று நோய்களில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கின்றன.

3.சிலருக்கு உடல் எடை அதிகமாய் இருக்கும் .அவர்கள் தேனை சுடுநீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்

4. மேலும் தேனுடன் பின்வரும் பொருட்களை சேர்த்து உட்கொள்வதன் மூலம் உடல் எடை இன்னும் வேகமாக குறைவதோடு, ஆரோக்கியமும் மேம்படும். அது பற்றி பார்க்கலாம்

5.முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி விடுங்கள் .பின்னர் அந்த நீருள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

6.பின்னர் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் பட்டையைப் போடுங்கள்

7.பின்னர் பட்டையுடன் நீர் கொதித்ததும் இறக்கி, 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

8. பிறகு 10 நிமிடம் கழித்து, நீரை வடிகட்டி கொள்ளவும்

9.பின்னர் வடிகட்டிய நீருடன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

10.இந்த தேன் சேர்ந்த கஷாயத்தை தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், உடல் எடை நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவில் குறையும்

No comments:

Post a Comment