அனைவருக்கும் புகைப்படங்கள் எடுப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒரு செயல்தான்.
நமக்கு பிடித்த போட்டோக்களை மொத்தமாக ஸ்மார்ட்போனிலோ அல்லது ஹார்ட் டிஸ்கிலோ சேமித்து வைத்து, நமக்கு வேண்டிய நேரத்தில் அவற்றை மீண்டும் எடுத்துப் பார்த்து பழைய நினைவுகளை அசை போடுவது மிகவும் அற்புதமான ஒரு நிகழ்வாகும். ஆனால் சில நேரங்களில் நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சில தவறுகளினால் இந்த போட்டோக்கள் அனைத்தையும் தெரியாமல் நாம் அழித்து விட வாய்ப்புகள் உண்டு. அதிர்ஷ்டவசமாக அவ்வாறு மொத்தமாக அழிந்துவிட்ட புகைப்படங்கள் அனைத்தையுமே நம்மால் மீட்டெடுக்க முடியும்.

பேக்கப் : உங்களது ஸ்மார்ட்போனில் நீங்கள் பேக்கப் ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருக்கும் பட்சத்தில் உங்களுடைய புகைப்படங்கள் பெரும்பாலும் கிளவுட் ஸ்டோரேஜ் முறையில் சேமித்து வைத்திருக்க வாய்ப்புகள் மிகவும் அதிகம். கூகுள் போட்டோஸ், ஐ கிளவுட், ட்ராப் பாக்ஸ் போன்ற கிளவுட் ஸ்டோரேஜ் செயலிகளை பெரும்பாலும் மக்கள் பயன்படுத்துகின்றனர். ஒருவேளை உங்களது மொபைலும் நீங்கள் இதனை இன்ஸ்டால் செய்து இருந்தால் புகைப்படங்கள் உங்கள் மொபைலில் அழிந்தாலும் இந்த கிளவுட் ஸ்டோரேஜ்க்கு அவற்றை நீங்கள் மீட்டெடுத்து கொள்ளலாம்.

ரீசென்ட்லி டெலிட்டட் ஃபோல்டர்: அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் நீங்கள் புகைப்படத்தை அழிக்கும் போது அவை பேக் அப் ஃபைல் போன்று ஒரு குறிப்பிட்ட போல்டரில் சேமிக்கப்படும். நீங்கள் தவறுதலாக அழித்த சில புகைப்படங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு வந்து ரிசென்ட்லி டெலீடட் போல்டரில் இருக்க வாய்ப்புகள் உண்டு. இவற்றின் மூலமும் நீங்கள் அழித்த புகைப்படங்களை மீட்டு எடுத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை மேலே கூறிய இரண்டு முறைகளிலும் உங்களால் புகைப்படத்தை மீட்டெடுக்க முடியவில்லை எனில் பல்வேறு மூன்றாம் தரப்பு செயல்கள் விண்டோஸ், மேக் மற்றும் மொபைல் டிவைஸ்களில் கிடைக்கின்றன. இதற்கு முதலில் உங்களது மொபைல் அல்லது கணினியில் அந்த ரிகவர் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டும் பிறகு உங்களது டிவைஸை கணினியில் யுஎஸ்பி கேபிள் மூலம் இணைக்க வேண்டும்.

பிறகு போட்டோ ரிக்கவரி சாப்ட்வேரை ஆன் செய்து அதில் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அழித்த புகைப்படங்களுக்கான ஸ்கேனை மேற்கொள்ள வேண்டும். ஸ்கேன் முழுமையாக முடிந்ததும் அந்த போட்டோ ரிக்கவரி சாஃப்ட்வேர் மூலம் நீங்கள் அழித்த புகைப்படங்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கும்.

அவற்றில் உங்களுக்கு தேவைப்படும் புகைப்படங்களை தேர்வு செய்து ரிக்கவர் என்ற பட்டனை அழுத்தினால் அவை மீண்டும் உங்களது மொபைலிலோ அல்லது கணினியிலோ சேமிக்கப்படும். இந்த வழிமுறைகளை பின்பற்றி பெரும்பாலும் நீங்கள் தவறுதலாக அழித்த புகைப்படங்களை மீட்டு எடுத்துக் கொள்ளலாம். மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சங்கடங்கள் ஏற்படாமல் தவிர்க்க, முடிந்த அளவு உங்களது புகைப்படங்களை கிளவுட் ஸ்டோரேஜிலோ அல்லது ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றிலும் பேக்கப் எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
No comments:
Post a Comment