Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 29, 2023

அனைத்து பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் , உயர்க்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2022 - 23ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் உயர்க்கல்வி பயில வேண்டும் என்பது கல்வித்துறையின் நோக்கமாக உள்ளது. அதாவது 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11ம் வகுப்பிற்கு செல்லவும், 12ம் வகுப்பு முடிந்த மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 

அதன்படி, 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள், 11ம் வகுப்பில் என்னென்னெ பாடப்பிரிவுகள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வகையிலும், அதேபோல, 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் என்னென்னெ படிப்புகள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வகையிலும் முக்கிய பாடப்பிரிவுகள் வாரியாக, வீடியோ தயாரித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்டு ஒரு குழு செயல்பட வேண்டும் எனறும் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளது என்பதையும், எந்த பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்தால், பின்னாளில் எந்த மாதிரியான வேலைகளுக்குச் செல்லமுடியும் என்பது பற்றிய விரிவான தகவல்களை எடுத்துரைக்க வேண்டும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment