Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 18, 2023

SSC தேர்வுகளும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு


சி.ஆர்.பி.எப். தேர்வைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சி. தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL - Combined Higher Secondary Level Exam) ஆகிய தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

மேற்குறிப்பிட்ட இரு தேர்வுகளும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் இனி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடிசா, அசாமி, பெங்காலி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கணி என 13 மாநில மொழிகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.சி. எம்டிஎஸ் தேர்வு வருகிற மே 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

முன்னதாக சி.ஆர்.பி.எப். தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment