Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 5, 2023

1 வாரம் ஒரு கிளாஸ்.. கொலஸ்ட்ராலை முற்றிலும் கரைத்து வெளியேற்றி விடலாம்

நம் உடலில் இருக்கும் இரத்த குழாயில் கெட்ட கொலஸ்ட்ரால்கள் சேர்வதால் மாரடைப்பு வருகின்றது.

இரத்த குழாயில் மட்டுமில்லாமல் உடலில் பல இடங்களில் இந்த கெட்ட கொலஸ்ட்ரால்கள் படிந்து பலவிதமான நோய்களை ஏற்படுத்துகின்றது.

அவ்வாறு பலவிதமான நோய்களுக்கு காரணமாக இருக்கும் இந்த கெட்ட கொலஸ்ட்ரால்களை கரைத்து வெளியேற்றி எவ்வாறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உடலில் உள்ள கொழுப்புகளில் மொத்தம் இரண்டு வகை உள்ளது. எல்.டி.எல்(LDL) எனப்படும் அடர்த்தி குறைந்த கொழுப்புகளை கெட்ட கொழுப்புகள் என்றும் ஹெச்.டி.எல்(HDL) எனப்படும் அடர்த்தி மிகுந்த கொழுப்புகளை நல்ல கொழுப்புகள் என்றும் பிரிக்கலாம்.

எது எப்படியோ நம் உடலில் கொலஸ்ட்ரால் சரியாக உள்ளதா இல்லையா என்று நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இரத்தத்தில் இந்த கெட்ட கொழுப்புகள் அதிக அளவில் இருந்தால் இதனால் இதய நோய் வரக்கூடும்.

இதனால் நம் உடலில் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கெட்ட கொழுப்புகளை கரைக்கக் கூடிய அற்புதமான மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்

* பூண்டு - இரண்டு பல்
* இஞ்சி - சிறிதளவு
* ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு - சிறிதளவு
* தேன் - 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் இரண்டு பூண்டு பல்களை எடுத்து தோல் உரித்து நன்கு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி சிறிதளவு எடுத்து தோல் உரித்து அதையும் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கிளாஸ் அளவு சுடு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சுடு தண்ணீரில் எடுத்து வைத்துள்ள ஒரு ஸ்பூன் பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஏற்கனவே துருவி வைத்துள்ள இஞ்சி விழுதையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆப்பிள் சீடர் வினிகர் இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். பிறகு கடைசியாக இதில் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஒரு கால் மணி நேரம் மூடி வைத்து விடவும். கால் மணி நேரம் கழிந்து இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை குடிப்பதற்கு முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு இந்த பானத்தை குடிக்க வேண்டும்.

இது போல தொடர்ந்து ஒரு வாரம் காலை நேரத்தில் இந்த பானத்தை குடிக்க வேண்டும். ஒரு வாரம் மட்டுமே குடிக்க வேண்டும். அதற்கு மேல் இதை குடிக்க கூடாது. தேவைப்பட்டால் ஒரு மாதம் கழிந்து மீண்டும் இதை தயார் செய்து குடிக்கலாம்.

இந்த பானத்தை தயார் செய்து குடிப்பதால் முன்பு கூறியது போல இரத்தக் குழாய்களில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகின்றது. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் நமக்கு ஏற்படும் மலச்சிக்கல், வாயுப் பிரச்சனை, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளும் இருக்காது. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், குடல் புண் உள்ளவர்கள் இந்த பானத்தை குடிக்க வேண்டும்.

இந்த மருந்தில் இருக்கும் பொருள்களின் பலன்கள்.

இந்த பூண்டு கெட்ட கொழுப்புகளை கரைக்கக் கூடிய அற்புதமான பொருள். இதனால் பூண்டுகளை மருத்துவர்கள் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகம் பரிந்துரை செய்கின்றனர். பூண்டித் உள்ள ஆர்கானிக் சல்பர் எனப்படும் சத்து கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்க உதவுகின்றது.

பூண்டு இதய நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பூண்டு கொலஸ்ட்ரால் அளவை 7 சதவீதம் வரை குறைக்க உதவுகின்றது. ஹைபர் கொலஸ்டரால் நோய் உள்ளவர்கள் பூண்டுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பூண்டு எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும் செய்கின்றது.

இஞ்சி நமக்கு ஏற்படும் செரிமான பிரச்சனையை சரிசெய்ய உதவுகின்றது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகின்றது. மேலும் இஞ்சி உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.

இஞ்சி நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது. இஞ்சி இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கின்றது.

பக்கவாதம், மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும் இஞ்சி பயன்படுகிறது. மேலும் எண்ணெய் உணவுகளை உட்கொள்ளும் பொழுது உடலில் படியும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க இஞ்சி உதவுகின்றது.

புளிப்பு தன்மையுடன் இருக்கும் ஆப்பிள் சீடர் வினிகர் நம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

ஆப்பிள் சீடர் வினிகர் நம் உடலில் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகின்றது. ஆப்பிள் சீடர் வினிகரித் உள்ள அசிட்டிக் அமிலம் நம் உடலில் இருக்கும் எல்டிஎல் கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகின்றது.

எலுமிச்சை சாற்றை ஆப்பிள் சீடர் வினிகருக்கு பதிலாக சேர்த்துக் கொள்ளலாம். எலுமிச்சை சாற்றில் இருக்கும் விட்டமின் சி கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது.

எலுமிச்சை சாற்றில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை இரத்த நாளங்களில் படியக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகின்றது.

தேனில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி நமது உடலில் இரத்தத்தில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை இதயத்தின் இரத்த குழாய்களில் படிய விடாமல் தடுக்கின்றது.

No comments:

Post a Comment