JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 12,828 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எவ்வித எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்) அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)

விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற முகவரியின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, ஜனவரி மாதத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக இரண்டாம் பாகத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் (சாதி சான்றிதழ், கல்வித் தகுதி, மின்னஞ்சல், புகைப்படம், கையெழுத்து, தொலைபேசி எண்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கல்வி தகுதி: குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். 10ம் வகுப்பில் விண்ணப்பித்தில் குறிப்பிட இருக்கும் உள்ளூர் மொழியை 10ம் வகுப்பில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.
நாடு முழுவதும் : 12,828 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், தமிழ் நாட்டில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களில் 18 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. கோயம்பத்தூர், தருமபுரி, திண்டுக்கல், சேலம் கிழக்கு, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மண்டலங்களில் தலா 2 இடங்களும், தாம்பரம் மண்டலத்தில் 3 இடங்களும், விருத்தாச்சலம் மண்டலத்தில் 4 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தைத் தாண்டி, நாட்டின் எந்தவொரு அஞ்சல் வட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் (அதாவது 10ம் வகுப்பு) பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டி வருவதற்கான விண்ணப்பத்தை Rule 3-A (iii) of GDS (Conduct and Engagement) Rules, 2020-ன் படி சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment