JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம்.
டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் எல்லா வயதினருக்கும் சாதாரணமாகிவிட்டது. பிறகு காலை பல்துலக்குதல் போல இன்சுலின் போட்டுக் கொள்வதும், மாத்திரைகளும் நம் தினசரி எடுத்துக் கொள்வதுமாக வழக்கமாகிவிட்டது. இயற்கை முறையில் இதனை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
மன அழுத்தம் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் பற்றியும் இந்த நோய் வரக்கூடிய காரணங்கள் பற்றித் தெரியாமல் இருப்பதுவும் அதிகமானோர் இந்த நோயைப் பெறக் காரணமாக இருக்கிறது. ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கையாள்வதாலும் நோய் பற்றிய விழிப்புணர்வாலும் இந்நோயை நாம் நிச்சயமாகத் தடுக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
1. கொய்யா இலை
2. மிளகு
3. கிராம்பு
4. மோர்
5. எலுமிச்சை பழம்
செய்முறை:
1. முதலில் மிக்ஸி ஜாரில் கொய்யா இலை, மிளகு சிறிதளவு, கிராம்பு சிறிதளவு, ஒரு எலுமிச்சை பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி இது கூடவே சேர்த்துக் கொள்ளவும். இதனை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அரைத்து எடுத்த கலவையை வடிகட்டி, அதனுடைய இரண்டு ஸ்பூன் அளவு தயிரை மோராக மாற்றி இக்கலவையில் கலந்து குடித்து வருகையில் சர்க்கரையின் அளவு குறையும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் குறைந்து ஆரோக்கியமான சூழ்நிலை மாறுவதை காண்பீர்கள்.
No comments:
Post a Comment