Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 8, 2023

பிளஸ் 2 முடிச்சாச்சு.. என்ன படிக்கலாம்? அதிக சம்பளம் கிடைக்கும் டாப் 19 படிப்புகள் எவை தெரியுமா?

பிளஸ் 2 முடிச்சாச்சு இப்ப அடுத்து என்ன படித்தால் மிக அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று எல்லாரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் இந்த கட்டுரையை வாசித்தால் தெளிவு கிடைக்கும்.

பிளஸ் 2விற்கு பிறகு என்ன படிக்கலாம், நான் பயோமேக்ஸ், நான் கம்ப்யூட்டர் சைன்ஸ் குரூப், நான் பியூர் சைன்ஸ் குரூப், நான் அக்கவுண்டன்சி குரூப் படிச்சேன், நான் அக்ரி குரூப் படிச்சேன், நான் வொகேசனல் குரூப் படிச்சேன் என்று ஒவ்வொருவரும் தாங்கள் படித்த குரூப்பின் படி உயர்கல்வியில் சேர தயாராகி கொண்டிருப்பீர்கள்.

என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் முன், உங்களுக்கு என்ன விருப்பம் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். பிடித்ததை படியுங்கள், அதற்கு ஏற்ற வேலைகள் இங்கு ஆயிரம் இருக்கின்றன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் எல்லா துறையிலும் தேவைதான்.

சரி, இந்தியாவில் அதிகப்படியான சம்பளம் தரக்கூடியவேலைகள் என்ன? அதற்கு என்ன படிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

பிளஸ் 2 முடித்தவர்கள் பயோமேக்ஸ் மற்றும் பியூர் சைன்ஸ் குரூப் படித்தவர்கள் டாக்டர் ஆக விரும்புவார்கள். அதற்கு எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு உண்டு. டாக்டர் ஆனால் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்கலாம். வெளிநாடுகளில் டாக்டர்களுக்கு பெரிய வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன. இந்தியாவிலும் நிறையவே இருக்கிறது. வெறும் எம்பிபிஎஸ் என்று இல்லாமல் மேலும் உயர்கல்வி படித்தால் சிறப்பான வரவேற்பு இருக்கும்.

அடுத்ததாக கம்ப்யூட்டர் சைன்ஸ் குரூப் எடுத்தவர்கள் சாப்ட்வேர் என்ஜினியர்களாக விரும்புவார்கள். இந்தியாவிலேயே அதிக சம்பளம் கம்ப்யூட்டர் சைன்ஸ் தொடர்பான படிப்பு படித்தவர்களுக்குத்தான் கிடைக்கிறது. இந்த உலகம் எல்லாத்துறையிலும் கடந்த 25 வருடங்களாக டிஜிட்டல் மயமானது. இனி டிஜிட்டலின் உச்சகட்டமாக எந்திரமயமாக போகிறது. அதாவது எல்லாமே ஏஐ மயமாக போகிறது. இதற்கு ஆர்டிபிக்கல் இன்டலிஜன்ஸ் எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு வருங்காலத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். அதாவது ரோபோடிக் என்ஜினியரிங் பணிகளுக்கு மிகப்பெரிய ஊதியத்துடன் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ஆர்ட்ஸ் குரூப் எடுத்தவர்களுக்கு அதிக சம்பளத்தை தரும் படிப்பு என்றால் அது சிஏ தான். சிஏ படிப்புக்கும் அதிக வரவேற்பு இருக்கிறது. அதேபோல் வக்கீல் ஆனாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். நம் நாட்டில் திறமையான வழக்கறிஞர்கள், நீதிபதியாகி மிகப்பெரிய மதிப்பு மரியாதையுடன் நல்ல நிலையை அடைய முடியும். எனவே வழக்கறிஞர் படிப்பும் சிறப்பானதாகவே இருக்கும்.

சரி, இந்தியாவில் எந்த படிப்பு முடித்தவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா? கீழ்கண்ட 19 படிப்புகளுக்கு தான் 2023ம் ஆண்டு நிலவரப்படி அதிக சம்பளம் கிடைக்கிறது. அவற்றை விவரமாக பார்ப்போம்.

1. ஆர்டிபிகல் என்ஜினியர் ( Artificial Intelligence (AI) Engineer)

2. டேட்டா சைன்டிஸ்ட் ( Data Scientist )

3. மெசின் லேனிங் எக்ஸ்பெர்ட் (Machine Learning Experts )

4. பிளாக்செயின் டெவலப்பர் (Blockchain Developer)

5. புல்ஸ்டாக் சாப்ட்வேர் டெவலப்பர் ( Full Stack Software Developer)

6. புராடெக்ட் மேனேஜ்மெண்ட் (Product Management)

7. மேனேஜ்மெண்ட் கன்சல்டண்ட் (Management Consultant)

8. மார்க்கெட்டிங் மேஜனர் ( Marketing Manager)

9. பிசினஸ் அனாலிசிஸ்ட் (Business Analyst)

10. இணையதள நிபுணர்கள் (Internet of Things (IoT) Solutions Architect)

11. என்ஜினியரிங் மேனேஜர் (Engineering Manager)

12. ஐடி சிஸ்டம்ஸ் மேனேஜர் (IT Systems Manager)

13. டேட்டா என்ஜினியர் (Data Engineer)

14. சாப்ட்டேவர் ஆர்கிடெக்ட் (Software Architect)

15. க்ளொட் ஆர்க்கிடெக்ட் (Cloud Architect)

16. டெவ்ஆப்ஸ் என்ஜினியர் ( DevOps Engineer)

17. இன்வெஸ்மெண்ட் பேங்கர் (Investment Banker)

18. சார்ட்ர்டு அக்வுண்டன்ட் ( Chartered Accountant)

19. மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் (Medical Professionals (Doctors and Surgeons))

இதில் குறிப்பிடப்பட்டுள்ள 19 படிப்புகளில் முதல் ஐந்து படிப்புகள் சாப்ட்வேர் துறையை சார்ந்தது ஆகும். அடுத்தபடியாக மார்க்கெட்டிங் மேனெஜர், பிசினஸ் அனாலசிஸ்ட் போன்ற நிர்வாக படிப்புகளுக்கும், இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர், ஆடிட்டர், டாக்டர்கள் போன்ற படிப்புகளும் அதிக சம்பளம் தரக்கூடியவையாக உள்ளன. மொத்தம் உள்ள 19 படிப்புகளில் பாதிக்கும் மேல் ஐடி துறை சார்ந்தவை ஆகும். இவைதான் அதிக சம்பளம் தரும் படிப்புகளாகும்.

No comments:

Post a Comment