
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் இன்று (மே 18) முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத்தேர்வு ஜூன் 19 முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள், பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க கடந்த மே 11 முதல் 17-ம் தேதி (நேற்று) வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள் தட்கல் முறையில் இன்று (மே 18) முதல் வரும் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதுதவிர தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசுசேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இதற்கிடையே தட்கல் முறையில் விண்ணப்பிப்பதால் மாணவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.மேலும், தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வுகால அட்டவணை, வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment