Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 13, 2023

4 , 5 - ம் வகுப்புகளுக்கும் எண்ணும் , எழுத்தும் திட்டம் விரிவாக்கம்


அனைத்து ஆசிரியர்களுக்கும் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

4, 5 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது.

கணிதத்திறனுடன் பிழையின்றி எழுத படிப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் வரும் கல்வியாண்டில் 4,5 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக அந்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு (2023-2024) முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4, 5 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 4, 5 ஆகிய வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து பாடப் பொருள் உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பாடப் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி மே 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும் மாவட்ட அளவிலான பயிற்சி மே 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஒன்றிய அளவிலான பயிற்சி ஜூன் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்ளும் வகையில் அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து பணி விடுப்பு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment