Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 1, 2023

கல்லூரிகளில் மாணவர் குறைதீர் மையங்கள்: யுஜிசி வழிகாட்டுதல்கள் வெளியீடு

கல்லூரிகளில் மாணவர் குறைதீர் மையங்கள் அமைக்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ்குமார், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு யுஜிசி சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதில், மாணவர்களின் குறைகளை தீர்ப்பதற்காக வெளிப்படைத் தன்மையுடன் கூடிய குழுவை அமைக்க வேண்டும். மாணவர்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில், கல்வி நிறுவனம் சாராத ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.

இந்தக் குழு மாணவர்களுக்கும், கல்லூரிக்கும் இடையிலான பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

பிரத்யேக குழு... இதற்கிடையே, தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியது உயர்கல்வி நிறுவனங்களின் கடமை. எனவே, யுஜிசி வகுத்துள்ள வழிகாட்டுதல்களை தவறாது பின்பற்றி, கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். கல்லூரிகளில் மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, உடனடியாக பிரத்யேக குழுவை அமைக்க வேண்டும் என்றும் யுஜிசி தெரித்துள்ளது.

No comments:

Post a Comment