Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 4, 2023

மூலநோய் முற்றிலும் குணமாக என்ன செய்யலாம்!! நிரந்தர தீர்வு!!

மூலநோய் மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது.

ஆனால் இந்த நோய் மிகவும் வேதனையானது. மூல நோய் ஆசனவாய் உள்ளே அல்லது வெளியே உள்ள நரம்புகள் வீக்கம் அடையும் ஓர் நிலையாகும். மலம் கழிக்கும் போது வலி, எரிச்சல் போன்ற உணர்வுகள் தொடர்ந்து ஏற்படுவது இதற்கு அறிகுறிகளாகும். இதனை சரி செய்ய சில வழிமுறைகளை பார்க்கலாம்.

மூல நோய் வர காரணங்கள் :

நார் சத்துக் குறைவாக இருக்கும் உணவுகளை சாப்பிடுதல், காரம் அதிகமாக இருக்கும் உணவை எடுத்துக் கொள்ளுதல், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்வதன் மூலமாகவும் மூல நோய் ஏற்படும்.

மூலநோய் சரி செய்ய வழிமுறைகள்:

மூல நோய் உள்ளவர்கள் முள்ளங்கி ஜூஸ் காலை மற்றும் மாலை இருவேளையும் எடுத்துக் கொள்ளும் பொழுது சரியாகிவிடும்.

அத்திப்பழத்தை தினமும் நான்கு முதல் ஆறு பழம் வரை சாப்பிட்டு வருகையில் மூலநோய் குணமாகிவிடும். இதேபோன்று அத்தி காயும் மிகுந்த சத்து உடையது. அத்தி காயை வாரத்தில் இரண்டு முறை பொரியல் செய்து சாப்பிட்டு வருகையில் மூலநோய் முழுமையாக சரியாகும்.

உலர்ந்த அத்திப்பழத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடித்து வருகையில் எத்தகைய கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 சாப்பிட்டு வருகையில் உள்மூலம், வெளிமூலம் இரண்டுமே குணமாகும்.

No comments:

Post a Comment