Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 16, 2023

பணிநிரவல் கலந்தாய்வில் அவசரம் வேண்டாம் : ஆசிரியர்கள் சங்கங்கள் போர்க்கொடி

'அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வில் அவசரம் காட்டாமல், இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு பின் செப்.,ல் நடத்த வேண்டும்.

வழக்கம் போல் இதிலும் அதிகாரிகள் பிடிவாதம் பிடிக்க வேண்டாம்' என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொதுமாறுதல் கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதற்கட்டமாக அரசு உயர், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு பின் மாறுதல் கலந்தாய்வு நடத்த பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் 'ஆசிரியர்கள் உணர்வை' கண்டுகொள்ளாமல் கலந்தாய்வு துவங்கியுள்ளது.மே 22 ல் உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடக்கிறது. அதாவது உபரி ஆசிரியர்களை தேவை உள்ள இடங்களுக்கு பணிநிரவல் செய்வது. இக்கலந்தாய்வு '2022 ஆக.,௧ல் மாணவர் சேர்க்கை அடிப்படையில் உபரி ஆசிரியர் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தாண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக உயரும் என்பதால் '2023 ஆக.,1' ன் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. எனவே பணிநிரவல் கலந்தாய்வை மட்டும் வரும் செப்.,க்கு தள்ளிவைக்க வேண்டும் என சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் 100க்கும் மேல் பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். இவர்களை 2022ன் கணக்குப்படி பணிநிரவல் செய்தால், 2023ல் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்பட்சத்தில் அந்த பள்ளிகளுக்கு 'ஆசிரியர் தேவை' அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது ஆசிரியர்களை மீண்டும் மாற்ற வேண்டிய குழப்பம் ஏற்படும். இதை தவிர்க்க '2023 மாணவர் சேர்க்கை' முடிந்த பின் வரும் செப்.,ல் பணிநிரவல் கலந்தாய்வு நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இத்துறை கமிஷனர் மாற்றம் செய்யப்பட்ட பின் ஆசிரியர் உணர்வை மதிக்காமல் அதிகாரிகள் இனியும் பிடிவாதம் காட்ட வேண்டாம், என்றார்.

No comments:

Post a Comment