
பலருக்கும் பிடித்த பலாப்பழத்தை சாப்பிட்டால் யாருக்கெல்லாம் பாதிப்பு என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஒரே நேரத்தில் அதிகமான பலாப்பழத்தை சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட வாய்ப்புள்ளது.
அறுவை சிகிச்சையின் போதும் அதற்கு பின்பும் எடுத்துக் கொள்ளக்கூடிய மாத்திரைகளோடு எதிர்வினை புரிகையில் பலாப்பழம் அதிக மயக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதிகமான கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். பலாப்பழம் ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் பலாப்பழம் சாப்பிட்டவுடன் அரிப்பு, வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
சிறுநீரக மாற்றம், ரத்த சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள் பலாப்பழத்தை தவிர்க்குமாறு உணவியல் நிபுணர்கள் பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment