JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களாகத் தேர்வுகள் நடைபெறும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மே 19ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணைய வழியில் மட்டும் சமர்ப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
வங்கிப் பணியாளர்: 182
ஒப்பந்த அடிப்படையிலான பணிகள்: 35
மொத்த காலிப்பணியிடங்கள்: 217
தகுதி:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு பணியிடத்துக்கான முன்னுரிமை படிப்புகள் குறித்த விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள எஸ்.பி.ஐ.யின் இணையதளத்தைப் பார்வையிடவும்.
வயது வரம்பு:
பதவி வாரியாக வயது வரம்பை எஸ்.பி.ஐ. குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களுக்கு அதன் இணையதளத்தைப் பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.sbi.co.in/web/careers/current-openings#lattest என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ. 750/-ஐ செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
முக்கிய தேதி:
விண்ணப்பங்களை மே 19ஆம் தேதிக்குள் இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு மையம்:
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் ஒரு தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு https://bit.ly/3VBLtfe என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.
No comments:
Post a Comment