JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இந்தியாவில் தற்பொழுது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் அட்டையைதான். அந்த அளவிற்கு ஆதார் ஆட்டை மக்களின் இன்றியமையாத முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் சேவை மற்றும் மாநில அரசின் சேவைகளை பெறவும் தற்பொழுது ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது
இந்நிலையில், தற்பொழுது ஆதார் கார்டு குறித்து இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கடந்த பத்து ஆண்டிற்கும் மேலாக ஆதார் அட்டையை புதுப்பிக்காதவர்கள் கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும் எனவும் புதுபிக்காதவர்கள் வருகிற ஜூன் 14 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக இலவசமாக புதுபித்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் கார்டை ஜூன் 14 ஆம் தேதிக்கு பிறகு புதுபிக்க விரும்புவர்கள் அதற்கான குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே புதுபிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைனில் ஆதார் கார்டை புதுபிப்பதர்கான வழிமுறைகள்:
- முதலில் https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும். அதில், ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- அதன்பிறகு, உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP வரும். அதனை உள்ளிட்ட பிறகு ஆவண புதுப்பிப்பு என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில், அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று ஆகிய பட்டியலை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். அதன்பிறகு, புதுப்பிப்பு படிவம் சமர்ப்பிக்க வேண்டும். இப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆதர அட்டையை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment