Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 16, 2023

உங்க மகன்/ மகளுக்கு பாஸ்போர்ட் எடுத்தாச்சா? ஆன்லைனிலேயே ஈஸியா விண்ணப்பிக்கலாம்... முழு விபரம்..

உலகம் சுருங்கி விட்டது. பக்கத்து ஊருக்கு வேலைக்கோ... படிக்கவோ அனுப்ப யோசித்த காலங்கள் இப்போது கிடையாது.

நிறைய பயணப்பட இந்த தலைமுறை விரும்புகிறது. பயண அனுபவங்களே வாழ்க்கையை அழகாக்குகிறது. அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது. இதுவரையில் உங்கள் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் எடுக்கவில்லையெனில், அவர்கள் மேல்நிலை வகுப்பு முடித்தவுடனேயே பாஸ்போர்ட்டுக்கும் சேர்த்து விண்ணப்பித்து விடுங்க. எத்தனை ஆவணம் இந்திய குடிமகனுக்கு இருந்தாலும் கடவுச்சீட்டு என்று சொல்லப்படும் பாஸ்போர்ட் இருந்தால் தான் நீங்க இந்திய எல்லைகளைத் தாண்ட முடியும். அப்படிப்பட்ட ஆவணமான பாஸ்போர்டைப் பெற இப்போது வீட்டில் இருந்தபடியே அப்ளை செய்யலாம் தெரியுமா?

மேல்நிலை வகுப்புகளை முடித்து விட்டு, கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் தலைமுறையினர் அதுவரையில் பாஸ்போர்ட் எடுக்கலைன்னா உடனே விண்ணப்பிப்பது நல்லது. எனெனில், வேலைக்கு முயற்சிக்கும் போது, உள்ளங்கைக்குள் சுருங்கி விட்ட இன்றைய உலக சந்தையில், உங்கள் பயோ-டேட்டாவில் உங்களுடைய பாஸ்போர்ட் எண்ணும் இருந்தால் அது கூடுதல் பலம் தாம். நம் நாட்டை விட்டு சுற்றுலா பயணியாக நீங்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட பாஸ்போர்ட் மிக முக்கியமான விஷயம். பாஸ்போர்ட் உங்கள் குடியுரிமையை உறுதிப்படுத்துகிறது. நீங்கள் எந்த நாட்டின் குடிமகன் என்பதை தெரிவிக்கிறது. உங்ககிட்ட பாஸ்போர்ட் இல்லையா? கலவரமாகாதீங்க... இப்ப பாஸ்போர்ட் பெறுவது மிக எளிது.


எம் - பாஸ்போர்ட் சேவா செயலி மூலம் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். ஆனால் ஆதார் அட்டை உங்ககிட்ட இருக்கணும். ஆதார் அட்டையின் அடிப்படையில் மட்டுமே பாஸ்போர்ட்டை பெற முடியும். இந்த செயலி மூலம் நீங்களே விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட்டுக்கு ரூ.1500 மட்டுமே கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். போலீஸ் சரிபார்த்த ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் உங்கள் வீட்டிற்கு வந்து சேரும்.

உங்கள் மொபைலில் mPassport Seva செயலியைப் பதிவிறக்கம் செய்யவும். புதிய பயனர் பதிவு என்பதைக் க்ளிக் செய்யவும். உங்கள் முகவரியின் விபரங்களை உள்ளிட்டு அதன் அடிப்படையில் பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தேர்வு செய்யவும். அதன் பிறகு, பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி போன்ற தகவல்களை நிரப்பவும். இப்போது தனிப்பட்ட உள்நுழைவு ஐடியை உள்ளிடவும். இது உங்களுடைய மின்னஞ்சல் முகவரியாகவும் இருக்கலாம். இதன் பின்னர், உங்களுக்கென தனியாக பாஸ்வேர்ட்டை உருவாக்கவும்.

கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் க்ளிக் செய்தால் இப்போது பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு சரி பார்ப்பு இணைப்பு அனுப்பப்படும். அந்த இணைப்பைக் க்ளிக் செய்வதன் மூலம், நீங்கள் ஒரு புதிய வலைப்பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். மேலும் சரிபார்ப்பிற்காக உங்கள் உள்நுழைவு ஐடியை உள்ளிடுமாறு கேட்கும்.

கணக்கு சரிபார்க்கப்பட்ட பிறகு, பயன்பாட்டை மூடி விட்டு மீண்டும் உள்ளே நுழையவும். இப்போது விண்ணப்பதாரர் ஏற்கனவே உள்ள பயனர் பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும். உள்நுழைவு ஐடி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்தவுடன் அப்ளை ஃபார் ஃப்ரெஷ் பாஸ்போர்ட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்க. வரிசையா கேட்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுங்க.... இப்போ பணத்தை செலுத்துங்க.

இப்போது உங்களுக்கான அப்பாயிண்ட்மெண்ட் தேதி என்ன? எத்தனை மணிக்கு பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வரச் சொல்றாங்க போன்ற விபரம் கிடைக்குதா? அதிக நேரமாகாது. பாஸ்போர்ட் மையத்துக்குச் செல்லும் பொழுது கையோட உங்களுடைய ஒரிஜனல் ஆவணங்களையும் பத்திரமா எடுத்துக்கிட்டு போங்க. அவங்க சரிபார்த்துட்டு திருப்பி உங்ககிட்ட கொடுத்துடுவாங்க. அப்படியே உங்க பேவரைட் கலர்ல டிரஸ்ஸையும் மறக்காதீங்க... அவங்க அங்கே எடுக்கிற புகைப்படம் தான் உங்க பாஸ்போர்ட்டில் அழகுப்படுத்தும். ஒரே வாரத்துல உங்களுடைய பாஸ்போர்ட் வீடு தேடி வந்துடும்.

No comments:

Post a Comment