JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

காலையில் உணவு உண்ணாமல் தவிர்த்து விடுவதால் உடலுக்கு பல்வேறு வகையான தீமைகள் வந்து சேர்கின்றன.
ஆனால் இது யாருக்கும் தெரிவதில்லை.
அதனால் பலரும் தங்களது காலை உணவை தவிர்த்து விட்டு அவர்களுக்கே தெரியாமல் ஆபத்தை மெல்ல மெல்ல வாங்கிக் கொள்கிறார்கள்.
அவ்வாறு காலை உணவை தவிர்ப்பவர்களாக நீங்கள் இருந்தால் இந்த பதிவின் மூலம் காலை உணவை தவிர்ப்பதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
காலை உணவை தவிர்ப்பதால் வரும் பிரச்சனைகள்
* காலை உணவை உண்ணாமல் தவிர்த்து விட்டால் இரைப்பை காலியாக இருக்கும். இரைப்பை காலியாக இருந்தால் இரவு நேரத்தில் சுரக்கும் பித்த நீர் எளிமையாக தலைக்கு செல்லும் அபாயம் இருக்கின்றது.
* காலையில் உணவு உட்கொள்ளவில்லை என்றால் வயிற்றில் புண், வயிறு உப்புசம் போன்ற வயிற்றுக் கோளாறு ஏற்படும். அது மட்டுமில்லாமல் வாந்தி, மயக்கம், மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்ற நோய்களும் ஏற்படுகின்றது.
* காலை நேரத்தில் உணவு உண்ணாவிட்டால் உடலில் உள்ள கலோரிகள் குறைந்து உடல் சோர்வு ஏற்படும். அது மட்டுமில்லாமல் உடல் வளர்சிதை மாற்றத்தில் சிதைவு ஏற்படும்.
* காலை உணவு எடுத்துக் கொள்ளாவிட்டால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். எப்படி என்றால் காலை உணவு உண்ணாமல் இருந்தாலும் உணவை ஜீரணமாக்க உதவும் ஜீரணிக்கும் அமிலம் சுரக்கும். காலையில் உணவு உண்ணாமல் இருந்தால் இந்த ஜீரணிக்கும் அமிலம் சுரந்து குடலை அரிக்கத் தொடங்கும். இதனால் குடல் நோய்கள் ஏற்படும்.
* காலை நேரத்தில் உணவு உண்ணாவிட்டால் மதிய நேர உணவையும் திருப்தியாக உண்ண முடியாது. சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு தோன்றும்.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் காலை நேர உணவை உண்ண வேண்டும். காலை நேர உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது. அப்படி சர்க்கரை நோயாளிகள் காலை நேர உணவை தவிர்த்தால் தலைச் சுற்றல் மயக்கம் ஏற்படும். இதனால் வேறு சில பிரச்சனைகள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும்.
No comments:
Post a Comment