Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 23, 2023

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் இனி கட்டாயம்

'சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்' என, பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குநர் நாகராஜ முருகன் அனுப்பியுள்ள சுற்றிக்கை:

தமிழக பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது.

அதன்படி, 2015 - 16ம் ஆண்டில், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாய பாடமானது.

அதற்கு அடுத்த, 2016 - 17ம் கல்வி ஆண்டில் இரண்டாம் வகுப்புக்கும், அடுத்த கல்வி ஆண்டில் மூன்றாம் வகுப்புக்கும் என, ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமலானது.

கடந்த 2022 - 23ம் கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் அமலானது. அடுத்த மாதம் துவங்க உள்ள, 2023 - 24ம் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், 2024 - 25ம் ஆண்டில், 10ம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயமாகிறது.

மாநில பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், 2024 - 25ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும்.

இந்த மாணவர்கள், பொது தேர்விலும், தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டியதும் கட்டாயம். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் போன்றவை விரைவில் வடிவமைக்கப்படும்.

எனவே, அனைத்து தனியார் பள்ளிகளும், தமிழில் தகுதியான ஆசிரியர்களாக பணி அமர்த்தி, மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயம் கற்றுத் தர வேண்டும்.

தமிழ் கட்டாய பாட முறை குறித்த அறிவிப்பை, தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment