இந்தியா முழுவதும் 2021 - 2022-ம் கல்வியாண்டில், 10 வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 35 லட்ச மாணவர்கள் 11-ம் வகுப்புக்குத் தேர்ச்சி பெறவில்லை அல்லது கல்வியைத் தொடரவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த 35 லட்சம் மாணவர்களில் 27.5 லட்சம் பேர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. 7.5 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்குபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு
உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம், ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் போன்ற 11 மாநிலங்கள் மட்டுமே 85 சதவிகித இடைநிற்றலுக்குப் பங்களித்துள்ளன. அதாவது 30 லட்சம் மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் கூறுகையில், `ஸ்டேட் போர்டில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் (12 லட்சம் ) குறைவாகவே உள்ளனர். மேலும் ஒரு பள்ளிக்குச் சராசரியாக 10 ஆசிரியர்கள் உள்ளனர்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் வல்லுநர்கள், பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் அதிக ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு பரிந்துரைத்துள்ளனர்.
திறந்தவெளி கல்வித்திட்டத்தின் கீழ் சுமார் 4.5 லட்ச மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. திறந்தவெளி பள்ளித் தேர்வுகளில் சீர்திருத்தங்கள் தேவை. தேர்வுக்குச் செல்லாத 7.5 லட்ச மாணவர்கள், திறன் அடிப்படையிலான பயிற்சிக்குச் சாத்தியமானவர்களாக இருக்கலாம் மற்றும் இவர்கள் கல்வி வலையில் தக்க வைக்கப் படலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment