தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து 3 பொதுத்தேர்வுகள் எழுதுவதன் காரணமாக, அதிகப்படியான மாணவர்கள் டிப்ளமோ படிப்பை தேர்வு செய்து வருகின்றனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு எதிரொலியாக, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாணவர்கள் தொடர்ந்து 3 பொதுத்தேர்வுகள் எழுதி சோர்வு அடைவதாலும், பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகாத நிலையில், இது குறித்து வலியுறுத்த ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment