ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள்.
ராகுபகவான் அதிர்ஷ்டத்தை வருமானத்தை அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். நவ கிரகங்களில் ராகு கேது நிழல் கிரகங்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் அக்டோபர் மாத இறுதியில் இடபெயர்ச்சி அடைய உள்ளனர். நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: இந்த ராகு பெயர்ச்சியால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு புதிய தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும். பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். திருமணம் நீண்ட நாள் கனவான குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் ராகு அமரப்போவதால் நினைத்தது நிறைவேறும் காலம் வந்து விட்டது.
அஷ்டலட்சுமி யோகம்: ஆறில் ராகு இருப்பது அஷ்ட லட்சுமி யோகத்தை தரக்கூடியது. உறவினர்களின் பாசமும் நேசமும் அதிகரிக்கும். ஆறாம் வீட்டிற்கு ராகு வரப்போவதால் எதிரிகள் தொல்லை ஒழியும். போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு அமரப்போவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். போட்டி பொறாமை பொடி பொடியாகும். முடியாத காரியங்களை முடித்து காட்டுவீர்கள்.
மன நிம்மதி: இதுநாள் வரை இருந்த துன்பங்கள் துயரங்கள் நீங்கும். கடன் பிரச்சினையில் இருந்தும் நோய்களில் இருந்தும் நிவாரணம் பெறுவீர்கள். தம்பதியரிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபராத்தில் இருந்த தடைகள் முன்னேற்றங்கள் நீங்கும். பிள்ளைகள் வழியில் இருந்த செலவுகள் நீங்கும். மன உளைச்சல் நீங்கும். எதிரிகள் உங்களைக் கண்டு விலகி ஓடுவார்கள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.
கேது பகவான்: உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு கேது பகவான் வரப்போவதால் அதிக நன்மையே ஏற்படும். உலக ஞானத்தை அறிந்து கொள்வீர்கள். உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். கோவில்களுக்கு பயணம் செய்வீர்கள். ஆன்மீக பயணம் அதிகரிக்கும். புது முயற்சிகள் கை கூடும்.வரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும்.சுப தேவைகளுக்கு கடன் பட நேரிடும். நிண்ட நாள் கடன்களும் அடையும். வண்டி வாகன மாற்றமும் வீடு மாற்றமும் சொந்த வீடு குடி போகும் யோகம் தேடி வரும்.
ராஜயோகம்: அம்மாவின் உடலில் இருந்த நோய்கள் நீங்கும் உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும். புது வீடு, உயர்பதவி யோகம் தேடி வரும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் யோகத்தை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி ராஜயோகத்தை கொடுத்து செல்வாக்கு சொத்து சுகத்தை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment