Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 27, 2023

தனது செயல்பாடுகளை பாராட்டி கடிதம் எழுதிய 4ம் வகுப்பு மாணவனை நேரில் சென்று சந்தித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

மாணவன் ஜெய் பிரணவ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்தார். கடந்த 6ம் தேதி கோவையை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவன் ஜெய் பிரணவ் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தான் அதில்; நான் கோயமுத்தூர் மாவட்டம் காளப்பட்டி சாலை நேரு நகரில் உள்ள எஸ்.எஸ்.பி. வித்யா நிகேதன் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறேன், வழக்கறிஞர், தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி என பன்முகத்திறன்கள் கொண்ட உங்களுக்கு கடிதம் எழுதுவதில் பெருமிதம் அடைகிறேன். ஏழ்மை குடும்பத்தில் பிறந்த நீங்கள் முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற வார்த்தைக்கிணங்க வாழ்க்கையில் பல சாதனைகளை புரிந்து கொண்டுருக்கிறீர்கள்.

குறிப்பாக நீங்கள் சுகாதாரத்துறை அமைச்சரான பிறகு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பெரும்பாலான மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். காரணம் அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலைங்களிலும் உள்ள சுகாதாரம், தரமான மருந்துகள் மற்றும் நவீன உபகரணங்கள். மாரத்தான் மன்னன் என்னும் அடைமொழிக்கிணங்க 100 மாரத்தன்களில் கலந்து உலக சாதனை புரிந்த உங்களை வியந்துள்ளேன். இந்த வயதிலும் சுறு சுறுப்போடும், தன்னம்பிக்கையோடும் இருக்கும் நீங்கள் இந்த சிறுவனுக்கு ஊக்கமளிக்கும் சில வரிகள் உங்களிடம் இருந்து பதில் கடிதமாக எழுத வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுத்தான்.

தனது செயல்பாடுகளை பாராட்டி கடிதம் எழுதிய 4ம் வகுப்பு மாணவன் ஜெய் பிரணவ்வை நேரில் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர்; கடந்த 20 நாட்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன் பிரணவ் கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.அக்கடிதத்தை படித்துவிட்டு பதில் சொல்ல சொல்லியும் இருந்தார். பதில் கடிதம் எழுதுவதை காட்டிலும் நேரடியாக சந்திக்க வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கும் இருந்தது, அந்த வகையில் துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்காக இன்று கோவையிலிருந்த நான் அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டது மகிழ்ச்சியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment