இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய இன்னும் 6 நாட்களே உள்ளன..
ஆன்லைனில் எப்படி பதிய வேண்டும், மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தெரியுமா?
நம் நாட்டிலுள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று இப்போது ஆகிவிட்டது.
இலவசம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மூலமாக மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது... எனவே, இதில் தரப்படும் விவரங்கள் அனைத்துமே சரியானதாக இருக்க வேண்டும்... அதனால்தான், தற்போது, ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது...
இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் UIDAI நிறுவனம் myAadhaar போர்ட்டலில் வெளியிட்டிருந்தது.. மேலும் மக்கள் ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய myAadhaar பிளாட்ஃபார்மில், தரப்பட்டுள்ள கடைசி நாள் வரை இலவசமாக மாற்றங்களை செய்யலாம்..
கடைசி தேதி: அதாவது ஆதாரில் திருத்தம் செய்வதற்கு, வருகிற ஜூன் 14ம் தேதிதான் கடைசி நாளாகும்.. அதற்கு பிறகு, ஆதார் அட்டையில் மாற்றங்கள் / திருத்தங்கள் செய்ய கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஜூன் 14-க்கு முன்புவரை ஆதார் அட்டை விவரங்களை இ-ஆதார் போர்ட்டல் வழியாக மட்டுமே இலவசமாக அப்டேட் செய்ய முடியும்.. ஆனால், ஜூன் 15ம் தேதிக்கு பிறகு, ஆதார் மையங்களுக்கு சென்றால் ரூ.50 என்கிற கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். எந்த ஆதார் மையத்திற்கு சென்றாலும் இதே கட்டணம் பொருந்தும்.
ஆன்லைனில் ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது எப்படி தெரியுமா?
- யுஐடிஏஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (UIDAI website) உள்ள ஆதார் சுய சேவை போர்ட்டலுக்கு (Aadhaar Self Service Portal) செல்லவும்
- உங்கள் ஆதார் எண் (Aadhaar Number), கேப்ட்சா (Captcha) மற்றும் உங்கள் மொபைலுக்கு வந்த ஒடிபி (OTP) ஆகியவற்றை பயன்படுத்தி போர்ட்டலில் லாக்-இன் செய்யவும்.
- இப்போது டாக்குமெண்ட் அப்டேட் பகுதிக்கு (Document Update section) சென்று, ஏற்கனவே உள்ள விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.
- பிறகு ட்ராப்-டவுன் லிஸ்ட்டில் (drop-down list) இருந்து பொருத்தமான ஆவண வகையை தேர்ந்தெடுத்து, அவற்றை சரிபார்ப்பதற்காக அசல் ஆவணங்களின் (original documents) ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்றம் செய்யவும்
- இறுதியில், உங்களுக்கு கிடைக்கும் சேவைக்கோரிக்கை நம்பரை (Service request number) குறித்து வைத்து கொள்ளவும்.. காரணம், இந்த நம்பரை வைத்து தான், நீங்கள் விடுத்த ஆதார் அப்டேட் கோரிக்கையின் செயல்முறை எந்த படிக்கு வந்துள்ளது என்பதை உங்களால் கண்காணிக்க முடியும்.
ஆதார் அட்டையை புதுப்பிப்பது எப்படி தெரியுமா?
- UIDAI இணையதளத்தில் "ஆதாரைப் புதுப்பிக்கவும்" விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்
- அதில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் உங்கள் ஆதார் எண் இரண்டையும் உள்ளிட வேண்டும்.
- மெனுவிலிருந்து "ஓடிபி அனுப்பு" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
- உங்கள் கைப்பேசிக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ உள்ளிட வேண்டும். அதில் மெனுவிலிருந்து "உள்நுழை" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
- நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த ஆவணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பதிவேற்ற வேண்டும்
- மெனுவில் "சமர்ப்பி" என்பதைத் தேர்ந்தெடுக்க, புதுப்பிப்பு கோரிக்கை நம்பரை பெறுவீர்கள்.. மேலும் உங்கள் விவரங்கள் 15 வேலை நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்
No comments:
Post a Comment