தமிழகத்தில் மே மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தவா்களின் எண்ணிக்கை 66.70 லட்சமாக உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவல்:தமிழகத்தில் மே 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 70 ஆயிரத்து 825 ஆக உள்ளது. அவா்களில் ஆண்கள் 30 லட்சத்து 98 ஆயிரத்து 879 பேரும், பெண்கள் 35 லட்சத்து 71 ஆயிரத்து 680 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 266 பேரும் உள்ளனா்.
வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் மொத்த எண்ணிக்கையில், வயது வாரியான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவா்கள் 17 லட்சத்து 39 ஆயிரத்து 747 பேரும், 19 முதல் 30 வயதுக்குள்பட்ட கல்லூரி மாணவா்கள் 28 லட்சத்து 33 ஆயிரத்து 380 பேரும், 31 முதல் 45 வயது வரையுள்ளவா்கள் 18 லட்சத்து 44 ஆயிரத்து 601 பேரும், 46 வயது முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரா்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 705 பேரும் உள்ளனா். 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 6 ஆயிரத்து 391 போ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment