Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7 ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவு கடந்த 13 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2023-2024 கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதேபோன்று தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் என்-ஆர்.ஐ. இடஒதுக்கீட்டு இடங்களுக்கும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அத்துடன், துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதியும் ஜூலை 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tnhealth.tn.gov.in மற்றும் tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment