Friday, June 16, 2023

முகம் வயதான தோற்றம் போல் மாறுகிறதா!! இனி கவலை வேண்டாம்!!

பொதுவாக வயது ஏற ஏற முகச்சுருக்கம் ஏற்படுவது வழக்கம் தான்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு இளமையிலே முகச்சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது. இதனை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

வெள்ளரி, பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை சம அளவு எடுத்து, பன்னீர் விட்டு அரைத்து, முதலில் முகத்தை கழுவி காயவைத்து, பின் அரைத்த கலவையை முகத்தில் மேல் நோக்கி லேசாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் சுருக்கம் நீங்கும். ஐஸ் கட்டிகளை முகத்தில் மேல் லேசாக மசாஜ் செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்கும்.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயை உட்கொள்வதால் முகத்திற்கு மாய்ஸ்சரைஸ்ரே தேவையில்லை. அதுவே சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சிகளின்றி பராமரிக்கும். முகத்தில் வடியும் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சருமத் துளைகள் சுவாசம் பெற்று புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.

பீட்ரூட்:

இது முகத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டு வர முகம் சிகப்பாக தொடங்கும். மேலும் முகம் மென்மையாக இருக்கவும் தொடங்கும். பீட்ரூட் சருமத்துக்கு ஸ்கிரப்பாக பயன்படுகிறது.

கேரட்:

கேரட்டில் உள்ள சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பது நாம் அறிந்ததே. அதே போல் கேரட் சாப்பிடுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு முகத்திற்கு பொலிவைத் தருவதோடு வயதாகும் அறிகுறிகளைக் குறைக்கும். உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவில் கலந்து, பஞ்சால் முகத்தில் தடவவும். சுமார் ஐந்து நிமிடங்கள் அதை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News