Friday, June 2, 2023

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லம் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!



சமீப காலமாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாக மக்கள் தங்கள் உணவுகள் மற்றும் பானங்களில் வெல்லத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

டீ, டெஸெர்ட்ஸ், ரொட்டி என பலவற்றில் வெல்லத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

பொட்டாசியம் அதிமாக இருக்கும் வெல்லத்தில் கால்சியம், ஜிங்க், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்ற வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்களும் நிறைந்துள்ளன. உடலின் எலக்ட்ரோலைட் பேலன்ஸை பராமரிக்க வெல்லம் உதவுகிறது. குளிர்காலத்தில் வெல்லத்தை எடுத்து கொள்வதற்கான சிறந்த ஆரோக்கியமான வழியாக இருக்கிறது வெதுவெதுப்பான தண்ணீரில் அதனை கலந்து குடிப்பது. இந்த பானம் ஒரு நேச்சுரல் டீடாக்ஸ் ஏஜென்ட் மற்றும் சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது என்கிறது ஆயுர்வேதம். காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து குடிப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் சிறந்த செரிமானம் வரை பல நன்மைகளை அளிக்கின்றன.


பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சோனியா பக்ஷி இந்த பானம் பற்றி பேசுகையில், காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து குடிப்பது உடனடியாக ஆற்றலை அதிகரிக்கிறது, குறிப்பாக குளிர்காலத்தில். மருத்துவ நன்மைகளை வழங்கும் இந்த பானம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களை செய்யும் என்கிறார். ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கி பின் அதில் 1 இன்ச் அளவிலான வெல்லத்தை சேர்க்கவும். பின் அதனை கிளறினால் தண்ணீரில் வெல்லம் கரையும். தண்ணீர் சிறிது ஆறி வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பிறகு வடிகட்டி பருகலாம். இல்லை என்றால் வெல்லத்தை நசுக்கி பொடியாக்கி வெதுவெதுப்பான நீரில் நேரடியாக கலந்து குடிக்கலாம். இந்த பானத்தை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி சோனியா பக்ஷி பகிர்ந்து கொண்டுள்ளார்.

எலும்பு ஆரோக்கியம்: எலும்புகளை வலுவாக்குவதில் வெல்லம் முக்கிய பங்கு வகிக்கிறது. தவிர மூட்டு வலிகளை போக்க, எலும்பு சார்ந்த கோளாறுகளைக் குணப்படுத்தவும் வெல்லம் உதவுகிறது. வெல்லம் மூட்டுகளில் ஏற்படும் எந்த அழற்சியையும் தணித்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிகம் உள்ளதால், வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து குடிப்பது உடலில் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.

இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்கிறது: ஹீமோகுளோபின் லெவல் குறைவாக இருப்போர் வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து குடிப்பதால் சிறந்த பலன்களை பெற முடியும். வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் அதிகம் காணப்படுகிறது. எனவே வெல்லம் உடலில் ரத்த சிவப்பணுக்களின் (Red Blood Cell) எண்ணிக்கை சிறப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து சாப்பிடுவது நல்ல பலனை அளிக்கும்.

உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்றுகிறது: உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் பண்புகள் வெல்லத்தில் காணப்படுகின்றன. வெல்லம் இயற்கையாகவே உடலை டீடாக்ஸிஃபை செய்கிறது, ரத்தத்தை மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து தினசரி மிதமான அளவில் குடிப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கும், உடல் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படும்.

எலக்ட்ரோலைட் பேலன்ஸை பராமரிக்கிறது: வெல்லத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் நம் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் பேலன்ஸை பராமரிக்க உதவுகிறது. வாட்டர் ரிடென்ஷன் (water retention) குறைகிறது, உடலில் இருக்கும் கூடுதல் எடையையும் குறைக்க வெல்லம் உதவுகிறது. நீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் இருந்தால் இடைவெளி விட்டு வாரத்திற்கு அதிகபட்சம் 2 அல்லது 3 முறை பருகலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: மெக்னீசியம், வைட்டமின் பி1, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி உள்ளிட்டவை வெல்லத்தில் அதிகம் உள்ளன. தவிர வெல்லத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் மினரல்ஸ்களும் நிரம்பியுள்ளன. எனவே உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காலை வெறும் வயிறில் வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை கலந்து குடிக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News