Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 11, 2023

எந்த நேரத்தில் தண்ணீர் குடிச்சா எந்த உறுப்பு பாதிக்கப்படும்னு தெரிஞ்சிக்கோங்க

பொதுவாக தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் ,ஆனால் கண்ட நேரத்தில் தண்ணீர் குடிப்பது உடலில் பாதிப்பை உண்டு பண்ணும்

தண்ணீரை எந்தெந்த நேரங்களில் குடிக்க கூடாது எனவும் குடித்தால் என்ன ஆகும் எனவும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

1. பலரும் காரமான உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது வழக்கம் .இப்படி நாம் நீர் அருந்தினால் அவை குடல் பகுதியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

2. சிலர் இரவு தூங்கும் முன்பு தண்ணீர் அருந்துவர் .இப்படி குடிப்பதால் இரவு நேரத்தில் கிட்னி மெதுவாகவே வேலை செய்து முகம் வீங்கும் .

3.பலரும் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் அவை செரிமான கோளாறை ஏற்படுத்தும்.

4.சிலர் மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பர் ,இப்படி குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி விடும்.

5.சிலர் அளவுக்கதிகமாக தண்ணீர் குடிப்பர் .ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடித்தாலே நமது உடலுக்கு போதுமானது.

6.மேலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உங்களின் உடலில் பாதிப்பை சந்திக்கும் முதல் உறுப்பு உங்களின் கிட்னி தான்.

7.அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.

8. இன்னும் சிலர் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள்.

9.இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து விடும்

10..மேலும் மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.

No comments:

Post a Comment