உலகளவில் உடல் பருமனால் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அதிகரித்த உடல் எடையைக் குறைக்க ஏராளமான டயட்டுகள் உள்ளன. ஆனால் அனைவராலும் டயட்டுகளை பின்பற்றி விட முடியாது.
இருப்பினும் உடல் எடையைக் குறைக்க குறிப்பிட்ட ஒருசில உணவுகள் பெரிதும் உதவி புரியும். அதுவும் சில உணவுகளை ஒன்றாக சேர்த்து உட்கொள்ளும் போது, அது உடல் எடையை வேகமாக குறைக்க உதவி புரியும்.
அதுவும் நாம் தினமும் சாப்பிடும் ஒருசில உணவுகளை ஒன்றாக சேர்த்து உட்கொள்ளும் போது, அது உடல் எடையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கீழே உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில அந்த உணவு சேர்க்கைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால், இந்த உணவுச் சேர்க்கைகளை உட்கொண்டு வாருங்கள்.
ஆப்பிள் மற்றும் தர்பூசணி
மிகவும் சுவையான மற்றும் சத்தான பழமான ஆப்பிளை தினமும் உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அந்த ஆப்பிளுடன் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணியை ஒன்றாக உட்கொள்ளும் போது, அது உடல் எடையைக் குறைக்க உதவும். ஏனெனில் தர்பூசணியில் கொழுப்பு குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. அதே சமயம் ஆப்பிளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இந்த காம்போவை உட்கொள்ளும் போது, அது எடை இழப்பைத் தூண்டும்.
பிஸ்தா மற்றும் பாதாம்
யாருக்கு தான் நட்ஸ் சாப்பிட பிடிக்காது. நிச்சயம் நட்ஸ் பலரது தினசரி ஸ்நாக்ஸில் இருக்கலாம். ஆய்வுகளின் படி, பாதாம் மற்றும் பிஸ்தாவை உட்கொள்வது, உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையை வேகப்படுத்த உதவுகிறது. ஆனால் இவற்றை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். இவ்விரு நட்ஸ்களும் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.
பசலைக்கீரை மற்றும் வாழைப்பழம்
நிச்சயம் இந்த உணவுச் சேர்க்கை பலரது முகத்தை சுளிக்க வைக்கலாம். வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளதால், இது வயிற்றை உடனடியாக நிரம்பச் செய்கிறது. இந்த ஹெவியான பழத்துடன் கலோரி குறைவான பசலைக்கீரையை உட்கொள்ளும் போது, அது உடல் எடையில் மாயங்களை செய்யும். பசலைக்கீரை கொழுப்புக்களைக் கரைக்க உதவுவதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்க செய்கிறது.
ஓட்ஸ் மற்றும் பெர்ரி
உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் தினமும் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிட ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர் பரிந்துரைக்கின்றனர். அப்படிப்பட்ட ஓட்ஸ் உடன் சரியான உணவுகளை சேர்த்து உட்கொள்ளும் போது, அது உடல் எடையில் இன்னும் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும். ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்து, பசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. அப்படிப்பட்ட ஓட்ஸ் உடன் பெர்ரி பழங்களை சேர்த்து உட்கொள்ளும் போது, அது எடை இழப்பிற்கு உதவுவதோடு, கொழுப்புச் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது.
சிக்கன் மற்றும் மிளகுத் தூள்
உடல் எடையைக் குறைக்க உதவும் மற்றொரு சுவையான உணவுச் சேர்க்கை தான் சிக்கன் மற்றும் மிளகுத் தூள். சிக்கனில் புரோட்டீன் அதிகமாக உள்ளன. இது ஒருவரது பசியை ஆற்றுவதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்யும். அத்துடன் மிளகுத் தூளை சேர்த்து சாப்பிடும் போது, மிளகில் உள்ள உட்பொருள் கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறையை அதிகரித்து, வேகமாக உடல் எடையைக் குறைக்கச் செய்கிறது.
முட்டை மற்றும் மிளகு
முட்டை ஒரு புரோட்டீன் உணவு. இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது. மிளகில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே முட்டையுடன் மிளகுத் தூளை சேர்த்து உட்கொள்ளும் போது, அது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
தயிர் மற்றும் பட்டைத் தூள்
இந்த காம்போ நிச்சயம் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் ஒரு பௌலில் தயிரில் சிறிது பட்டைத் தூள் சேர்த்து கலந்து உட்கொள்ளும் போது, அது உடலில் உள்ள கொழுப்புச் செல்களின் எண்ணிக்கையைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ஆகவே நீங்கள் எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், தயிருடன் பட்டை தூள் சேர்த்து சாப்பிடுவது நல்ல மாற்றத்தைக் காண உதவும்.
No comments:
Post a Comment