Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 24, 2023

தமிழக ரேஷன் கடைகளில் புது மாற்றம்.. பெண்களுக்கு வந்த குட்நியூஸ்.. தமிழக அரசு அடுத்த அதிரடி..

தமிழக அரசு, பெண்களின் முன்னேற்றத்துக்காக ஒவ்வொரு திட்டத்தையும், அறிமுகப்படுத்துவதுடன், அவைகளை செயல்படுத்தியும் வருகிறது..

இந்த மாற்றம், இனி தமிழக ரேஷன் கடைகளிலும் வரப்போகிறதாம்..!!

பொதுவாகவே அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக பெற்று செல்கின்றனர். இதைத்தவிர, ரேஷன் அட்டையின் மூலம் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களையும் பெற்று வருகின்றனர்.


குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கு, தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது..

தேங்காய் எண்ணெய்: இதைத்தவிர, தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டமும் அமலில் உள்ளது.. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், தமிழகத்தில் தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் விருப்பத்தின் பேரில் 18 கிலோ அரிசி, 2 கிலோ கேழ்வரகு என 20 கிலோ உணவுப் பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனிடையே, தமிழகத்தில் பெண்களுக்கு உதவுவதற்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்து, அவற்றை முறையாக செயல்படுத்தியும் வருகிறது...

ரேஷன் கடைகள்: இதில், ரேஷன் கடைகளின் மூலமும் புதிய திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரஉள்ளதாக தெரிகிறது.. அதாவது, குறைவான விலையில் அதிவேக இணையம் வழங்கும் சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழகத்திலேயே முதல்முறையாக புதுதிட்டம் அறிமுகமாகியுள்ளது.. கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே மகாதானபுரம் ரேஷன் கடைகளில், மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்பட்ட சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.. கரூர் மாவட்ட ஆட்சியர் இந்த சேவையை தொடங்கி வைத்திருக்கிறார்.. "தோழி" என்று சானிட்டரி நாப்கின்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

அதிக தரம்: மொத்தம் 21 ரேஷன் கடைகளில் இந்த நாப்கின்கள் விற்கப்படும் என்றும், இதன்மூலம் பெண்கள் அதிக தரத்திலான சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கலெக்டர் பேசும்போது, "கரூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் சுகாதார சானிட்டரி நாப்கின் தயாரிக்கப்பட்டு "தோழி" என்ற திட்டப்பெயரின் கீழ் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் முதன்முதலாக கரூர் மாவட்டத்தில் இந்த விற்பனை மகாதானப்புரத்தில் நியாய விலை கடையில் இன்று துவக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு: ஆறு நாப்கின்கள் அடங்கிய ஒரு பாக்கெட் ரூபாய் 30 விலையில் நியாய விலை கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இது வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுவதை விட 25 சதவீதம் விலை குறைவாக உள்ளது.. தமிழக அரசின் முன்னோடி திட்டமான இது கரூர் மாவட்டத்தில் 21 நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.. மாதவிடாய் காலங்களில் பெண்கள் சுகாதாரம் முறையில் இருப்பதற்காக இந்த சுகாதார சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது..

21 கடைகளில் இந்த நாப்கினை வாங்கி உபயோகப்படுத்தும் பெண்கள் சொல்லக்கூடிய, கருத்துக்களை கேட்டு அதற்கேற்றவாறு இந்த பொருளின் தரமும் மேம்படுத்தப்படும்..

ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமில்லாமல் மற்ற பெண்கள் அனைவரும் நியாய விலைக்கடைகளில் இந்த சுகாதார சானிட்டரி நாப்கினை வாங்கிச் செல்லலாம்... பொது நியாயவிலை கடைகளில் விற்கப்படும்போது கிராமப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் இங்கு வாங்கி பயன்பெறலாம் என்ற அடிப்படையில் பொது விநியோக கடைகளில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.

பெருகும் நம்பிக்கை: முதன்முதலில் கரூரில் இந்த விற்பனை அறிமுகமாகியுள்ள நிலையில், விலைவில் பிற மாவட்டங்களிலும் விற்பனைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment