காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சில வருடங்களுக்கு முன்பாக எம் பில் பட்டப்படிப்புகளுக்கான கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.
இந்த வகுப்புகளில் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர் பணிகளில் இருந்த ஏராளமான கூடுதல் தகுதி பெறுவதற்காக சேர்ந்து படித்து சான்றிதழ்களை வாங்கியுள்ளனர். இந்த கூடுதல் கல்வி தகுதியை பெற்றவர்களுக்கு வேலை பார்க்கும் இடங்களில் கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படுவதுண்டு. இப்படி பலரும் உதவித்தொகை பெற்று வந்தனர். இந்நிலையில் தணிக்கை துறையினர் நடத்திய ஆய்வின்போது கோடை கால சிறப்புகள் என்னும் பெயரில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் செல்லாது.
இதற்கு பல்கலைக்கழக நிதிநிலை குழு அனுமதி இல்லை என தெரிவித்து வழங்கப்பட்ட ஊக்கத்தொகையினை திருப்பி செலுத்த வேண்டும் என கூறியுள்ளது. அதேபோல் பதவி உயர்வினை எதிர்பார்த்து காத்திருந்த சிலரும் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து சிலர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிலர் கூறியதாவது, பல்கலைக்கழக தரப்பில் அழகப்பா பல்கலைக்கழகம் ஏ ப்ளஸ் அங்கீகாரம் பெற்றது. அதனால் கோடைகால சிறப்பு வகுப்புகள் செல்லும் என கூறப்பட்டாலும் அதற்குரிய விவரங்களை உரிய முறையில் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.
அதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல்கலைக்கழக அலுவலக பிரதான வாயிலின் முன்பாக அமர்ந்து எம்டிஎஸ் சான்றிதழ்களை பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கிறோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேசி வழக்குகளை கவனித்து வருகிறோம். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment