நடப்புக் கல்வியாண்டில், வேளாண்மை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்களில் சேர விண்ணப்பிக்க நாளை (ஜூன் 9) கடைசி நாள் ஆகும்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பொது மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. நடப்புக் கல்வியாண்டில் வேளாண் பல்கலைக் கழகத்தின் 14 பட்டப்படிப்புகளுக்கும், 3 பட்டயப் படிப்புகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 6 பட்டப் படிப்புகளுக்கும், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கும் ஒரே விண்ணப்பம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘இதுவரை 34 ஆயிரம் விணணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மாணவர்கள் தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வரும் 9-ம் தேதி கடைசி நாள் ஆகும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment