தமிழ்நாட்டில் வெயில் மோசமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார். 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளும் ஜூன் 7ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவித்தார். பள்ளிகள் திறக்கப்படும் முன் கோடை வெயில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்தான் தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிபோகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடனே ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். மீண்டும் அவர் ஆலோசனை நடத்தி பள்ளிகள் திறப்பை தள்ளி போடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment