Join THAMIZHKADAL WhatsApp Groups
2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், 2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும் தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
இந்த நிலையில், 2011ஆம் ஆண்டுக்கு முன்பு, நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், நேரடி நியமன ஆசிரியர்களுக்கு மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயமாக்கி தமிழக அரசு பிறப்பித்த விதி ரத்து செய்யப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்றும் தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
No comments:
Post a Comment