சர்க்கரை நோயை விரட்ட நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் ஒன்று போதும். அது என்ன பொருள்? எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அந்த ஒரு பொருள் என்னவென்றால் கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகம் நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நீக்கும் வல்லமை கொண்டது. கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது.
இதில் அதிக அளவில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் நன்கு செயல்படுகிறது. நன்கு செயல்படும் கருஞ்சீரகம் பொடி அல்லது கருஞ்சீரக எண்ணையை உணவில் சேர்த்துக் கொண்டால் கணையத்தில் உள்ள புற்று செல்களை அழிக்க முடியும் என சொல்லப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை தினமும் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
அது மட்டுமல்லாமல் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்த முடியும். கருஞ்சீரகப் பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். செரிமான கோளாறு உள்ளிட்ட பிற வயிற்று பிரச்சனைகள் குணமாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
உடல் எடை அதிகமாக இருந்தால் பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாம் உடலில் இருக்கும் அதிகப்படியான எடையை குறைக்க கருஞ்சீரகம் உதவுகிறது. எடையை குறைக்க நினைப்பவர்கள் கருஞ்சீரகத்தை நன்கு வறுத்து பொடி செய்து தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட வேண்டும். இதை பயன்படுத்தும் முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment