பள்ளிகளில் உடற்கல்வி பாட வேலைகளை கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்க வேண்டாம் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளர்.
முதலமைச்சர் கோப்பை விளையாடு போட்டிகளில் தஞ்சவூர் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா தமிழ் பல்கலை கழகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி மாவட்ட அளவிலான போட்டியில் வென்ற மாணவர்களுக்கு, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான களங்கள் காத்திருப்பதாக தெரிவித்தார். உடற்கல்வி பாடவேலையை கடன் வாங்காமல் கணிதம், அறிவியல் பாடவேலைகளை விளையட்டுக்கு கடன் கொடுங்கள் என அமைசர் உதயநிதி பேசிய போது பலத்த கரஒலி எழுந்தது.
தஞ்சாவூரில் மற்றுமொரு நிகழ்சியில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ரூ.10கோடி செலவில் அமைக்கபட்ட அதிநவீன பேட் சிடி ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தார். அதே வளாகத்தில் ரூ.46கோடி மதிபீட்டில் ஒருங்கினைந்த புற்றுநோய் சிகிட்சை மையதிற்கும் அவர் அடிகல் நாடினார்.
இந்த விழாவில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புற்றுநோயை துள்ளியமாக கண்டறியும் பேட் சிடி ஸ்கேன் கருவி தமிழ்நாட்டில் 2 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில், நெல்லை, தஞ்சாவூரில் இந்த கருவி அமைக்கபட்டுள்ள நிலையில் விரைவில் சேலம், கோவை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளிலும் கொண்டுவர இருப்பதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment