சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்தாலும் ஜூன் முதல் வக்ரநிலையில் பயணம் செய்து வருகிறார். இதில் சுமார் 140 நாட்கள் சனிபகவான் பின்னோக்கி நகர்ந்து மகர ராசியில் பயணம் செய்து வருகிறார்.

பொதுவாகவே இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்கும் சனி ஆண்டுக்கு ஒருமுறை வக்ரமடைகிறார். சனிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று ஒன்பதாம் வீட்டிற்கு சூரியன் வரும் போது வக்ர நிவர்த்தியடைவார். திருக்கணித பஞ்சாங்கப்படி ஜூன் 17ஆம் தேதி சனியின் வக்ர காலம் ஆரம்பித்தது. இத்துடன் நவம்பர் 4ஆம் தேதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி சனிபகவானின் வக்ர காலம் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நீடிக்கிறது. ஜூன் முதல் நவம்பர் வரை நான்கு மாத காலம் சனிபகவான் வக்கிரமாக செல்வதனால் இந்த 3 ராசிகாரர்களின் தலைவிதியே மாறும். பண மழைக் கொட்டும். ராஜயோகம் அடிக்கும். அவர்கள் யார் என்று இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்கள் சனி வக்கிரத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். ஒவ்வொரு நபரும் தொழிலில் அபரிமிதமான லாபத்தைப் பெறுவார்கள். வேலையில் நல்ல பலன்கள், பெரிய பதவி, நல்ல சம்பளம் கிடைக்கும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு அடியிலும் தந்தையின் ஆதரவு கிடைக்கும், நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் சிறப்பாக நிறைவேறும்.

சிம்மம் : சிம்ம ராசிக்காரர்கள் சனி வக்கிரத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அரசியல் வாதிகள் பயனடைவர். அரசு ஊழியர்கள் இடமாற்றத்துடன் கூடிய நல்ல பதவிகளைப் பெறலாம். குறைந்தபட்சம் அது சாத்தியமாகும். எல்லாவிதமான பிரச்சனைகளும் நீங்கும். மன அழுத்தத்தை நீக்கி மன அமைதி ஏற்படும்.

மகரம் : மகர ராசிக்காரர்கள் இந்த முறை சாதகமான பலன்களைப் பெறுவார்கள். திடீரென்று பணம் வந்து சேரும். பண ஆதாயத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.புதிய வேலை தேடுபவர்கள் இந்த முறை வெற்றி பெறுவார்கள். பணியாளர்கள் கூட இடமாற்றம் செய்யப்படலாம் மொத்தத்தில், மகர ராசிக்கு ஒரு புதிய அத்யாயம் ஆரம்பம் ஆகும். வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.
No comments:
Post a Comment