Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆதிதிராவிடா் நலப் பள்ளி ஆசிரியா்கள், விடுதி காப்பாளா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் த.ஆனந்த், மாவட்ட அலுவலா்களுக்கு அனுப்பிய கடிதம்: நிகழ் கல்வியாண்டில் (2023-2024) ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு இணையவழியிலும், விடுதிகளில் பணியாற்றும் காப்பாளா்களுக்கு நேரடி முறையிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டு விருப்பமுள்ளவா்களிடம் இருந்து கடந்த மாதம் விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து பள்ளி தலைமையாசிரியா், முதுநிலை ஆசிரியா், கணினி பயிற்றுநா், உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா் ஆகியோருக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா், தமிழாசிரியா், காப்பாளா் ஆகியோருக்கு ஆகஸ்ட் 4-ஆம் தேதியும் பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டமும் நடத்தப்படவுள்ளது. இணையவழியில் நடைபெறவுள்ள இந்த கலந்தாய்வை எவ்வித தவறுகளும் நிகழாதவாறு உரிய வழிகாட்டுதல்களுடன்நடத்தி முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment