பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில், பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்) ஆகிய பதவிகளில், காலியாக உள்ள 4062 பணியிடங்களுக்கு ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிர்வாகம்: பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம், மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம்.
மேலாண்மை: மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.07.2023
பணியிடங்கள் மற்றும் எண்ணிக்கை விவரங்கள்
பள்ளி முதல்வர் - 303
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் - 2266
கணக்கர் - 361
இளநிலை உதவியாளர் (தலைமையகம்)- 759
ஆய்வக உதவியாளர்- 373
மொத்தம்: 4062
ஊதியம்
பள்ளி முதல்வர் - ரூ.78,800 - ரூ.2,09,200(ஊதிய நிலை 12)
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் - ரூ. 47,600- ரூ.1,51,100(ஊதிய நிலை 8)
கணக்கர் - ரூ.35,400- ரூ.1,12,400 (ஊதிய நிலை 6)
இளநிலை உதவியாளர் (தலைமையகம்) - ரூ.19,900- ரூ.63,200 (ஊதிய நிலை 1)
ஆய்வக உதவியாளர்- ரூ.18,000- ரூ.56,900 ( ஊதிய நிலை 1)
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்லூரி முதல்வர் பணிக்கு 12 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகள் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
PGT - ஆசிரியர்கள் பணிக்கு ஆங்கிலம், ஹிந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு, வணிகவியல் ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
பள்ளி முதல்வர் பதவிக்கு, ரூ.2000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ரூ.1500, ஆசிரியர் அல்லாத இதர அனைத்து பதவிகளுக்கும் ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தேர்வுக்கு விண்ணப்பிக்க, தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு
பதவிக்கு ஏற்றவாறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு. பதவிக்கு ஏற்ற சரியான வயது, வயது தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நேரம், தேர்வு நடக்கும் நாள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
ப்ளீஸ் மறக்காம ஒரு முறை படிக்கவும்...!
https://tribal.nic.in/AboutMinistry.aspx?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
https://emrs.tribal.gov.in/backend/web/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
காலிப் பணியிடங்கள் மாநிலம், பிரிவு விவரம் அறிய...!
No comments:
Post a Comment