Wednesday, July 12, 2023

பொதுத்துறை வங்கிகளில் 4,545 காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டது.

இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 4545 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது

இணையதள விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் : 21.07.2023 . விண்ணப்பக் கட்டணம்: அன்றிரவுக்குள்ளே கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் இளம்நிலை பட்டம் பெற்றவர்கள் (அல்லது) மத்திய அரசு அங்கீகரித்த அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.


வயதுக்கான தகுதி: எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2023 அன்று 28-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர். ஆதரவற்ற விதவைகள்/கணவரை பிரிந்து வாழும் பெண்கள் ஆகியோருக்கும் வயது உச்ச வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.175 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வின் மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறும். முதல் நிலை தேர்வு முடிவின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். ஆங்கிலம், இந்தியுடன் நாட்டின் 13 பிராந்திய மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு, பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது

https://www.ibps.in/ என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News