Wednesday, July 19, 2023

பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிப்பதற்கு லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் உதவி

நமது தேசிய மருத்துவ ஆணைய விதி, நிபந்தனையை நிறைவேற்றும் வகையில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டது பிலிப்பைன்ஸ் மட்டுமே. அங்கு 19 மருத்துவப் பாடங்களில் மருத்துவப் படிப்பு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பிலிப்பைன்ஸ் சென்று படித்து வருகின்றனர்.

பிலிப்பைன்ஸில் மிகச் சிறப்பாக இயங்கும் ப்ரோக்கன்ஷயர் மற்றும் தவோ மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதியாக 12 ஆண்டுகளாக லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அனுபவம் மிக்க பேராசிரியர்கள், நவீன டிஜிட்டல் சாதனங்கள், 4500 படுக்கை வசதி கொண்டமருத்துவமனைகள், பாதுகாப் பான விடுதிகள் ஆகியவற்றை இக்கல்லூரிகள் கொண்டுள்ளன.

லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் படிக்க இடம் பெற்றுத் தருவதுடன், விசா நீட்டிப்பு, வங்கிக் கடன் பெறுதல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு உதவி வருகிறது. படித்து முடித்து இந்தியா திரும்பியவுடன் இங்கு நடத்தப்படும் எஃப்.எம்.ஜி. எனும் தகுதித் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கிறது.

நீட் தேர்வில் குறைந்தது 107 மதிப்பெண்ணும், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் குறைந்தது 50% மதிப்பெண்ணும் பெற்று டாக்டராக இலக்கு உள்ளவர்கள், உடனே லிம்ரா நிறுவனத்தை அணுகலாம் என அதன்செய்திக் குறிப்பில். தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News