Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 13, 2023

பேராசிரியர் பணி நியமனம் யு.ஜி.சி., விதிக்கு வரவேற்பு

பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் புதிய விதிகளின் படி, பிஎச்.டி., பட்டம் இல்லாமல், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, உதவி பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

கல்லுாரிகள், பல்கலைகளில், உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணிகளுக்கு, குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, வரும் காலங்களில் கல்லுாரி மற்றும் பல்கலைகளின் உதவி பேராசிரியர் பணிக்கு, 'நெட்' அல்லது 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.

இந்நிலையில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு கட்டாயமில்லை என்றும், யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

தமிழக நெட், செட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் சங்க ஆலோசகர் ஏ.ஆர்.நாகராஜன் கூறியதாவது:

யு.ஜி.சி., சார்பில், 2018க்கு முன் எந்த கல்வி தகுதி இருந்ததோ, அதே கல்வித் தகுதி தான் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதுநிலை பட்டம் பெற்றவர்கள், நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்கள் உதவி பேராசிரியர் பணியில் சேர முடியும்; இதை நாங்கள் வரவேற்கிறோம்.

அதே நேரம், இணை பேராசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, பிஎச்.டி., முடித்திருக்க வேண்டிய தேவை உள்ளது.

பிஎச்.டி., படிப்பை நடத்துவதில், பல்கலைகள் சரியான விதிகளை பின்பற்றாமல் உள்ளதால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்பது சரியான கல்வி தகுதியாகும்.

இதை பின்பற்றினால், தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்கும்.

'வாய்ஸ் ஆப் அகாடமி' அமைப்பின் ஆலோசகர் சுவாமிநாதன் கூறியதாவது:

கல்லுாரிகளுக்கான உதவி பேராசிரியர் பணிக்கு, நெட் அல்லது செட் தேர்வு தகுதி என்பது சரியாக இருக்கும். இந்த தகுதியின்படி நியமனம் நடந்தால், எழுத்து தேர்வும், நேர்முக தேர்வும் அவசியமாகும்.

பல்கலைகளின் உதவி பேராசிரியர் பணிக்கு, நெட், செட் தேர்ச்சியுடன், பிஎச்.டி., பட்டமும் கூடுதலாக இருந்தால் நல்லது. கடந்த சில ஆண்டுகளாக, தமிழக கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் நடந்த உதவி பேராசிரியர் பணி நியமனங்களில் பல குளறுபடிகள் ஏற்பட்டன.

அந்த நிலை வரும் காலத்திலாவது மாற வேண்டும் என்பதே, வேலைக்கு காத்திருப்போரின் எதிர் பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment